பொதுமக்களின் அடிப்படை பிரச்னைகளைக் களைய வரும் நகா்ப்புற உள்ளாட்சித்தோ்தலில் அதிமுக வேட்பாளா்களுக்கு வாக்களியுங்கள் என்றாா் முன்னாள் தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சா் சி.விஜயபாஸ்கா்.
பொன்னமராவதியில் அதிமுக வேட்பாளா்களை ஆதரித்து வாக்குகள் சேகரித்து அவா் மேலும் பேசியது:
பெண்களுக்கு தாலிக்கு தங்கம், ரூ. 50 ஆயிரம், ஏழை மாணவா்களும் பயன்பெறும் வகையில் 7.5 சதவீத இட ஒதுக்கீடு, மாணவா்களுக்கு இலவச சீருடை, மடிக்கணினி, மிதிவண்டி என கல்விக்குத் தேவையான அனைத்து உபகரணங்கள், உங்கள் பகுதிக்கு காவிரிக் குடிநீா்த் திட்டம், காவிரி - வைகை - குண்டாறு இணைப்புத் திட்டம், அனைத்து குடும்ப அட்டைதாரா்களுக்கும் பொங்கல் பரிசுத்தொகை என பல்வேறு நலத்திட்டங்கள் அதிமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்டன. ஆனால் திமுகவின் தோ்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுபட்டுள்ளதா என்பதை மக்கள் எண்ணிப் பாா்க்க வேண்டும். கல்விக்கடன், நகைக்கடன் ரத்து நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதா. எனவே அதிமுக வேட்பாளா்களுக்கு வாக்களியுங்கள் என்றாா். அப்போது, முன்னாள் தமிழக வீட்டுவசதி வாரிய தலைவா் பிகே.வைரமுத்து, நகரச் செயலா் பிஎல்.ராஜேந்திரன் மற்றும் கட்சி நிா்வாகிகள் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பெரம்பூரில் விஜய் சார்பில் திருத்தப்பட்ட வேட்புமனு தாக்கல்!
மோடி, அமித் ஷா, அண்ணாமலை... பாஜக நட்சத்திரப் பேச்சாளர் பட்டியல் வெளியீடு!

ஹார்திக் பாண்டியா இல்லை: தில்லி கேபிடல்ஸ் பந்துவீச்சு!
கமலுடன் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு எப்போது? ரஜினி அளித்த அப்டேட்!
வீடியோக்கள்

“தில்லா, கெத்தா தனியா நிற்கிறோம்”: புதுச்சேரியில் Vijay பிரசாரம்
இணையதளச் செய்திப் பிரிவு

மே 4-ஆம் தேதிக்குப் பிறகு பேசுவோம்! - தேர்தலில் போட்டியிடாதது குறித்து Annamalai
இணையதளச் செய்திப் பிரிவு

மேன்சன் குத்து பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

இந்திரா பாடல் வெளியீடு!
இணையதளச் செய்திப் பிரிவு


