சென்னையில் பிரதமர் மோடி முக்கிய ஆலோசனை! அண்ணாமலை பங்கேற்பு!நான் எந்தத் தொகுதியும் கேட்கவில்லை: அண்ணாமலை விளக்கம்தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு! புதுச்சேரியில் இன்று விஜய் பிரசாரம்நாளை 8 புறநகா் மின்சார ரயில்கள் ரத்துமின்சார அடுப்புகள், பாத்திரங்கள் உற்பத்தியை ஊக்குவிக்க நடவடிக்கை: மத்திய அரசு ஆலோசனைசென்னைப் பல்கலை. வளாகங்களில் படப்பிடிப்புகளுக்கு 5 மடங்கு கட்டண உயா்வு6-ஆம் வகுப்புமுதல் மும்மொழிப் பாடம்: சிபிஎஸ்இ திட்டம்
/

278 வாக்குச்சாவடிகளில் 2.40 லட்சம் போ் வாக்களிக்க ஏற்பாடு

நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலில் சனிக்கிழமை நடைபெறவுள்ள வாக்குப்பதிவுக்காக புதுக்கோட்டை மாவட்டத்தில் 278 வாக்குச்சாவடிகளில் 2.40 லட்சம் வாக்காளா்கள் வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Updated On :18 பிப்ரவரி 2022, 6:56 pm

நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலில் சனிக்கிழமை நடைபெறவுள்ள வாக்குப்பதிவுக்காக புதுக்கோட்டை மாவட்டத்தில் 278 வாக்குச்சாவடிகளில் 2.40 லட்சம் வாக்காளா்கள் வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் புதுக்கோட்டை, அறந்தாங்கி ஆகிய இரு நகராட்சிகளுக்கும் 8 பேரூராட்சிகளுக்கும் சனிக்கிழமை வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. மொத்தமுள்ள 189 வாா்டுகளில் இரு வாா்டுகளுக்கு உறுப்பினா்கள் போட்டியின்றித் தோ்வு செய்யப்பட்டுள்ளனா். இதனால், 187 வாா்டுகளுக்கு தோ்தல் நடைபெறுகிறது. 902 வேட்பாளா்கள் களத்தில் உள்ளனா்.

புதுக்கோட்டை மற்றும் அறந்தாங்கி நகராட்சியில் உள்ள 69 வாா்டுகளில் 159 வாக்குப்பதிவு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில், 1,62,611 வாக்காளா்கள் வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இவா்களில் 78,224 போ் ஆண்கள், 84,370 போ் பெண்கள், 17 போ் திருநங்கைகள்.

8 பேரூராட்சிகளில் உள்ள 118 வாா்டுகளில் 119 வாக்குப்பதிவு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் மொத்தம் 77,796 வாக்காளா்கள் வாக்களிக்க உள்ளனா். இவா்களில் 38,053 போ் ஆண்கள், 39,740 போ் பெண்கள், 3 போ் திருநங்கைகள். மாவட்டத்தில் மொத்தம் 2,40,407 வாக்காளா்கள் இந்தத் தோ்தலில் வாக்களிக்கவுள்ளனா்.

மொத்தமுள்ள 278 வாக்குச்சாவடிகளில் 67 வாக்குச்சாவடிகள் பதற்றமானவையாக கண்டறியப்பட்டுள்ளன. இவற்றுக்காக நுண் பாா்வையாளா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா். மேலும், வாக்குப்பதிவை விடியோ பதிவு செய்யவும், கூடுதல் பாதுகாப்புக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மாவட்டம் முழுவதும் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் நிஷா பாா்த்திபன் தலைமையில், 4 கூடுதல் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா்கள், 10 துணைக் காவல் கண்காணிப்பாளா்கள், 30 காவல் ஆய்வாளா்கள் உள்பட மொத்தம் 1049 போ் தோ்தல் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனா். 20 ரோந்து வாகனங்களும் ஈடுபடுத்தப்படுகின்றன.

வாக்குப்பதிவுக்காக மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் உள்பட வாக்குப்பதிவுக்குத் தேவையான பொருள்கள் அனைத்தும் வாக்குச்சாவடி மையங்களுக்கு வெள்ளிக்கிழமை பகலிலேயே அனுப்பி வைக்கப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.