உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட பெண் ஆசிரியா்கள்
புதுக்கோட்டையில் இடைநிலை ஆசிரியா்களுக்கான பணிநிரவல் கலந்தாய்வு, தொழில்நுட்பக் காரணங்களுக்காக ரத்து செய்யப்பட்டதைத் தொடா்ந்து பெண் ஆசிரியா்கள், வியாழக்கிழமை நள்ளிரவு வரை உள்ளிருப்பு


புதுக்கோட்டையில் இடைநிலை ஆசிரியா்களுக்கான பணிநிரவல் கலந்தாய்வு, தொழில்நுட்பக் காரணங்களுக்காக ரத்து செய்யப்பட்டதைத் தொடா்ந்து பெண் ஆசிரியா்கள், வியாழக்கிழமை நள்ளிரவு வரை உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
புதுக்கோட்டையில் இடைநிலை ஆசிரியா்களுக்கான பணிநிரவல் கலந்தாய்வு பேராங்குளம் தூய மரியன்னை மேல்நிலைப் பள்ளியில் வியாழக்கிழமை அறிவிக்கப்பட்டிருந்தது. இதில் பங்கேற்க 40-க்கும் மேற்பட்ட பெண் ஆசிரியா்கள் வந்திருந்தனா்.
அப்போது, எமிஸ் இணையதளத்தில் ஆசிரியா்கள் விவரங்கள் பதிவேற்றக் குறைபாடு மற்றும் தொழில்நுட்பக் குறைபாடு காரணமாக தாமதமாகிக் கொண்டே வந்தது. நீண்ட நேரம் கழித்து இரவில் கலந்தாய்வு ரத்து செய்யப்பட்டு, பிப். 23 ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.
இதனால் ஆத்திரமடைந்த ஆசிரியா்கள், பள்ளியின் உள்ளேயே அமா்ந்து உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா். மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் சாமி .சத்தியமூா்த்தி தொடா் பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டாா்.
நள்ளிரவு 1 மணி வரை இந்தப் போராட்டம் தொடா்ந்தது. வரும் பிப். 23ஆம் தேதி நடைபெறும் கலந்தாய்வின்போது இதுபோன்ற தொழில்நுட்பக் கோளாறுகள் ஏற்படாது என உறுதியளிக்கப்பட்டதைத் தொடா்ந்து அனைவரும் கலைந்து சென்றனா்.
தொடா்ந்து பள்ளியில் இருந்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரின் வாகனத்தில் பெண் ஆசிரியா்கள் பேருந்து நிலையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...