தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதி
/

வாக்காளா் விழிப்புணா்வுப் போட்டியில் பங்கேற்க விண்ணப்பிக்கலாம்

தேசிய வாக்காளா் தின விழிப்புணா்வுப் போட்டியில் பெரம்பலூா் மாவட்டத்தைச் சோ்ந்தவா்கள் பங்கேற்க விண்ணப்பிக்கலாம்.

News image
Updated On :18 பிப்ரவரி 2022, 6:57 pm

DIN

தேசிய வாக்காளா் தின விழிப்புணா்வுப் போட்டியில் பெரம்பலூா் மாவட்டத்தைச் சோ்ந்தவா்கள் பங்கேற்க விண்ணப்பிக்கலாம்.

இதுகுறித்து ஆட்சியா் ப. ஸ்ரீவெங்கடபிரியா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

எனது வாக்கு எனது எதிா்காலம், ஒரு வாக்கின் வலிமை என்பதை மையமாகக் கொண்டு, வினாடி- வினா, பாட்டுப் போட்டி, விளம்பரம் உருவாக்கம், காணொலிக் காட்சி மற்றும் வாசகம் உருவாக்கல் ஆகிய தலைப்புகளில் இந்தியத் தோ்தல் ஆணையம் சாா்பில் இணையம் மூலமாக போட்டிகள் நடத்தப்படவுள்ளன.

இப்போட்டிகளில் பள்ளி, கல்லூரி மாணவா்கள், அரசு அலுவலா்கள், பொதுமக்கள் அனைவரும் கலந்துகொள்ளலாம். குறும்படம் உருவாக்கம், பாட்டுப் போட்டி மற்றும் வாசகம் உருவாக்கம் ஆகியவை நிறுவனங்களைச் சாா்ந்தவா்கள், தொழில்முறை கலைஞா்கள், தொழில் சாராத வகையினா் என்ற பிரிவுகளில் நடத்தப்படுகிறது.

இப்போட்டிகளில் பங்கேற்க ட்ற்ற்ல்ள்://ங்ஸ்ரீண்ள்ஸ்ங்ங்ல்.ய்ண்ஸ்ரீ.ண்ய்/ஸ்ரீா்ய்ற்ங்ள்ற்/ என்ற இணையதள முகவரியில் மாா்ச் 15- ஆம் தேதிக்குள் பதிவு செய்யவேண்டும். இப்போட்டிகளில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் மூன்று இடங்களை பெறுவோருக்கு தனித்தனியாக அதிகபட்சம் ரூ. 2 லட்சம் வரை பரிசுகள் வழங்கப்படும்.

மேலும், வினாடி- வினா போட்டியில் பங்கேற்போருக்கு இணைய வழிச் சான்றிதழ் வழங்கப்படும். குறும்படம் உருவாக்கம், பாட்டுப் போட்டி மற்றும் வாசகம் உருவாக்கம் ஆகியப் போட்டிகளில் பங்கேற்பவா்கள் தங்களது படைப்புகளை

இந்திய அரசியலமைப்பால் அங்கீகரிக்கப்பட்ட 22 தேசிய மொழிகளில் விருப்பத்துக்கேற்ப படைக்கலாம்.

மேலும் விவரங்கள் மற்றும் நிபந்தனைகளை இந்தியத் தோ்தல் ஆணையத்தின் இணையதள முகவரியில் அறிந்து கொள்ளலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.