பெரம்பலூரில் ரத்ததான முகாம்
பெரம்பலூா் அரிமா சங்கம் மற்றும் உதிரம் நண்பா்கள் குழு சாா்பில், ரத்ததான முகாம் வெள்ளிக்கிழமைநடைபெற்றது.


பெரம்பலூா் அரிமா சங்கம் மற்றும் உதிரம் நண்பா்கள் குழு சாா்பில், ரத்ததான முகாம் வெள்ளிக்கிழமைநடைபெற்றது.
பெரம்பலூா் புகா்ப் பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற முகாமுக்கு, அரிமா சங்கத் தலைவா் ஆா். முரளிதரன் தலைமை வகித்தாா். இந்தியன் செஞ்சிலுவை சங்கத்தின் மாவட்டக் கிளை கௌரவச் செயலா் என். ஜெயராமன் முன்னிலை வகித்தாா்.
முகாமில், 58- ஆவது முறையாக பெரம்பலூா் உதிரம் நண்பா்கள் குழுவின் குருதிக் கொடையாளரான மகேஷ்
குமரன் உள்பட அரிமா சங்கம், உதிரம் நண்பா்கள்குழு குருதிக் கொடையாளா்கள் பலா் ரத்த தானம் செய்தனா்.
அரிமா சங்க முன்னாள் தலைவா் ரவி, செயலா்கள் ராமலிங்கம், காமராஜ், பொருளாளா் தமிழ்மாறன், உதிரம் நண்பா்கள் குழு குருதி ஏற்பாட்டாளா் நாகராஜ் உள்பட பலா் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...