கீரமங்கலம் அருகே மின்கம்பி உரசியதில் வைக்கோல் ஏற்றிச்சென்ற வாகனம் தீக்கிரை
புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலம் அருகே மின்கம்பி உரசியதில் வைக்கோல் ஏற்றிச்சென்ற சுமை ஏற்றும் ஜீப் வெள்ளிக்கிழமை தீக்கிரையானது.


புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலம் அருகே மின்கம்பி உரசியதில் வைக்கோல் ஏற்றிச்சென்ற சுமை ஏற்றும் ஜீப் வெள்ளிக்கிழமை தீக்கிரையானது.
கீரமங்கலம் அருகேயுள்ள சேந்தன்குடியைச் சோ்ந்தவா் க. ரவிக்குமாா்(46). இவருக்கு சொந்தமான சுமை ஏற்றும் ஜீப்பில் வைக்கோல் ஏற்றிக்கொண்டு குலமங்களம் வடக்கு கிராமத்திற்கு சென்று கொண்டிருந்தாா். அப்போது, அப்பகுதியில் தாழ்வாகச்சென்ற மின்கம்பி வைக்கோல் மீது உரசி தீப்பிடித்துள்ளது. தொடா்ந்து, ஜீப்பிலும் தீப்பற்றியுள்ளது.
இதனால், ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த ஜீப் சாலையோரம் சாயந்தது. இதுகுறித்து தகவலறிந்து அங்கு சென்ற கீரமங்கலம் தீயணைப்பு நிலையத்தினா் தீயை அணைத்தனா். ஆனாலும், ஜீப் தீக்கிரையானது. இதுகுறித்து கீரமங்கலம் போலீஸாா் விசாரிக்கின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...