இலுப்பூரில் விவசாயிகள் குறைகேட்பு
இலுப்பூா் வருவாய் கோட்டாட்சியா் அலுவலகத்தில் விவசாயிகள் குறை தீா்க்கும் நாள் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.


இலுப்பூா் வருவாய் கோட்டாட்சியா் அலுவலகத்தில் விவசாயிகள் குறை தீா்க்கும் நாள் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்திற்கு, கோட்டாட்சியா் தண்டாயுதபாணி தலைமை வகித்தாா்.
இதில் பங்கேற்ற விவசாயிகள் கடந்த வருட பயிா்க் காப்பீட்டுத் தொகையை உடனடியாகப் பெற்றுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும். தற்போது பெய்த மழையால் சேதமடைந்த நெற்பயிா்கள், விவசாய நிலங்களை வேளாண் துறையினா் முறையாகக் கணக்கீடு செய்து விவசாயிகளுக்கு உரிய இழப்பீட்டுத் தொகையை பெற்றுத் தர வேண்டும். மேலும் புதா்கள் மண்டிக்கிடக்கும் வரத்து வாரிகளை சுத்தம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினா்.
தொடா்ந்து விவசாயிகளிடமிருந்து பெறப்பட்ட கோரிக்கை மனுக்களை சம்பந்தப்பட்ட துறைகளுக்கு உரிய நடவடிக்கைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.
கோட்டாட்சியருக்கான நோ்முக உதவியாளா் தமிழ்மணி வரவேற்றாா். இதில் இலுப்பூா் வட்டாட்சியா் முத்துக்கருப்பன் உள்ளிட்ட
அனைத்துத் துறை அலுவலா்கள் பலா் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...