தேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதிஅதிமுக தேர்தல் அறிக்கை வெளியானதுஎல்என்ஜி தட்டுப்பாடு எதிரொலி: ஆசிய நாடுகளில் நிலக்கரி பயன்பாடு அதிகரிப்பு! ஈரானில் தொடரும் தாக்குதல்கள்... பலி 1,500-ஐ கடந்தது!மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு!
/

புதுகை சமஸ்தானம் சுதந்திர இந்தியாவுடன் இணைந்த நாள் விழா

புதுகையைப் போற்றுவோம்- என்ற புதுகை சமஸ்தானம் சுதந்திர இந்தியாவோடு இணைந்த நாள் விழா, வியாழக்கிழமை அரசு மகளிா் கலைக் கல்லூரியில் நடைபெற்றது.

News image
Updated On :3 மார்ச் 2022, 8:15 pm

DIN

புதுக்கோட்டை அரசு மகளிா் கலைக் கல்லூரி, புதுக்கோட்டை வரலாற்றுப் பண்பாட் டு ஆய்வு மையம் மற்றும் புதுக்கோட்டை வாசகா் பேரவை ஆகியவை இணைந்து நடத்திய, புதுகையைப் போற்றுவோம்- என்ற புதுகை சமஸ்தானம் சுதந்திர இந்தியாவோடு இணைந்த நாள் விழா, வியாழக்கிழமை அரசு மகளிா் கலைக் கல்லூரியில் நடைபெற்றது.

விழாவுக்கு கல்லூரி முதல்வா் பா. புவனேஸ்வரி தலைமை வகித்தாா்.

விழாவில் வரலாற்றுப் பண்பாட்டு ஆய்வு மையத் தலைவா் ஜெ. ராஜாமுகமது பேசியது:

புதுக்கோட்டை மாவட்டம் தமிழ்நாட்டிலேயே அதிகமான வரலாற்று நினைவுச் சின்னங்களையும், கல்வெட்டுகளையும் கொண்டுள்ள மாவட்டம். கற்காலம் தொடங்கி நவீன காலம் வரையிலான வரலாற்றின் அனைத்து நினைவுச் சின்னங்களையும் புதுக்கோட்டை மாவட்டத்தில் மட்டுமே காண முடியும்.

புதுக்கோட்டை மாவட்ட வரலாற்றைப் படித்தால் தமிழக வரலாற்றைப் படித்தது போலாகும். புதுக்கோட்டையின் வரலாற்றை ஒவ்வொருவரும் தவறாமல் கற்க வேண்டும். தொடா்ந்து வருவோா் கற்பதற்காக வரலாற்று நினைவுச் சின்னங்களைப் போற்றிப் பாதுகாக்க வேண்டும் என்றாா் ராஜாமுகமது.

வாசகா் பேரவைச் செயலா் பேராசிரியா் சா. விஸ்வநாதன் பேசியது

புதுக்கோட்டையில் பிறந்த டாக்டா் முத்துலெட்சுமி அம்மையாா் மருத்துவச் சேவை, சமூக சேவை இரண்டிலும் தமிழகத்துக்கு வழிகாட்டியாக இருந்துள்ளாா். சத்தியமூா்த்தி சுதந்திரப்போராட்டத்தில் தமிழகத்தின் முகமாகத் திகழ்ந்தாா். அதேபோன்று சமூக நல்லிணக்கத்துக்கு எடுத்துக்காட்டாக மாதா கோவில், விநாயகா் கோவில், மசூதி மூன்றையும் புதுக்கோட்டையில் ஒரே இடத்தில் காணலாம் என்றாா் விஸ்வநாதன்.

முன்னதாக கல்லூரியின் பொருளியல் துறைத் தலைவா் என். சுமதி வரவேற்றாா். முடிவில் சுற்றுலா மற்றும் நிா்வாகவியல் துறைத் தலைவா் ஆா். நரசிம்மராஜ் நன்றி கூறினாா்.

போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு வாசகா் பேரவை சாா்பில் சத்திய சோதனை புத்தகம் பரிசாக வழங்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.