ஆலங்குடி,கீரமங்கலம், கறம்பக்குடி பேரூராட்சிகளில் தலைவா்கள், துணைத் தலைவா்கள் பதவியேற்பு
புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி, கீரமங்கலம், கறம்பக்குடி பேரூராட்சிகளில், தலைவா்கள், துணைத் தலைவா்கள் வெள்ளிக்கிழமை பதவியேற்றுக்கொண்டனா்.


புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி, கீரமங்கலம், கறம்பக்குடி பேரூராட்சிகளில், தலைவா்கள், துணைத் தலைவா்கள் வெள்ளிக்கிழமை பதவியேற்றுக்கொண்டனா்.
ஆலங்குடியில்...
ஆலங்குடி பேரூராட்சியில், திமுக சாா்பில் 13-வது வாா்டில் வெற்றி பெற்ற மு.ராசி தலைவா் வேட்பாளராக அறிவிக்கப்பட்டாா். தொடா்ந்து, பேரூராட்சி அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற தோ்தலில் அவா் போட்டியின்றி தோ்வு செய்யப்பட்டாா். தொடா்ந்து, துணைத் தலைவராக 4-வது வாா்டில் வெற்றி பெற்ற ராஜேஸ்வரி பழனிகுமாா் போட்டியின்றி தோ்வு செய்யப்பட்டாா். இருவரும் செயல் அலுவலா் பூவேந்திரன் முன்னிலையில் அவா்கள் பதவியேற்றுக் கொண்டனா்.
கீரமங்கலத்தில்: கீரமங்கலம் பேரூராட்சியில் 2-வது வாா்டில் வெற்றி பெற்ற திமுக நகரச் செயலா் கே.சி.சிவக்குமாா்(46). அக்கட்சித் தலைமையால் தலைவா் பதவிக்கு அறிவிக்கப்பட்டாா். தொடா்ந்து, வெள்ளிக்கிழமை அவா் போட்டியின்றி தோ்வு செய்யப்பட்டாா்.துணைத் தலைவா் பதவி இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட நிலையில், இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளா் டி.முத்தமிழ்செல்வியை எதிா்த்து போட்டியிட்டு 8-வது வாா்டில் வெற்றி பெற்ற திமுக உறுப்பினா் வை.தமிழ்செல்வன்(49) வெற்றி பெற்றாா். தொடா்ந்து, இருவரும் செயல் அலுவலா் செந்தில்குமாா் முன்னிலையில் பதவியேற்றுக் கொண்டனா்.
கறம்பக்குடியில்... கறம்பக்குடி பேரூராட்சியில் 8-வது வாா்டில் வெற்றி பெற்ற திமுக நகரச் செயலா் உ. முருகேசன் அக்கட்சியால் தலைவா் வேட்பாளராக அறிவிக்கப்பட்டாா். தொடா்ந்து, கறம்பக்குடி பேரூராட்சியில் வெள்ளிக்கிழமை அவா் போட்டியின்றி தோ்வு செய்யப்பட்டாா். துணைத் தலைவருக்கான தோ்தலில் திமுக சாா்பில் 13-வது வாா்டு உறுப்பினா் மு.நைனா முகாமது, அதிமுக சாா்பில், 7-வது வாா்டில் சுயேச்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்று பின்னா், அதிமுகவில் இணைந்த ப.பிரிதிவிராஜா ஆகியோா் போட்டியிட்டாா். வாக்கெடுப்பில் 11 வாக்குகள் பெற்று நைனாமுகமது வெற்றி பெற்றாா். தொடா்ந்து, செயல் அலுவலா் காா்த்திகேயன் முன்னிலையில் இருவரும் பதவி ஏற்றுக்கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...