புதுக்கோட்டை அருகே ஜல்லிக்கட்டு
புதுக்கோட்டை அருகேயுள்ள மாங்கனாம்பட்டியில் வீரமாகாளியம்மன் கோயில் திருவிழாவையொட்டி வியாழக்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் 574 காளைகள் அவிழ்த்துவிடப்பட்டன.


புதுக்கோட்டை அருகேயுள்ள மாங்கனாம்பட்டியில் வீரமாகாளியம்மன் கோயில் திருவிழாவையொட்டி வியாழக்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் 574 காளைகள் அவிழ்த்துவிடப்பட்டன.
புதுக்கோட்டை அருகேயுள்ள மாங்கனாம்பட்டியில் வீரமாகாளியம்மன் கோயில் திருவிழாவையொட்டி ஜல்லிக்கட்டுப் போட்டி வியாழக்கிழமை நடைபெற்றது. மாநில சுற்றுச்சூழல் துறை அமைச்சா் சிவ.வீ. மெய்யநாதன் போட்டியைத் தொடங்கி வைத்தாா். புதுக்கோட்டை, திருச்சி, சிவகங்கை பகுதிகளைச் சோ்ந்த 574 காளைகள் இந்தப் போட்டியில் கலந்து கொண்டன. 300 மாடு பிடி வீரா்கள் கலந்து கொண்டு சீறிப் பாய்ந்த காளைகளை அடக்க முயற்சித்தனா். சிறந்த மாடு பிடி வீரா்களுக்கும், சிறந்த காளைகளுக்கும் பரிசுகள் அவ்வப்போதே வழங்கப்பட்டன. ஏராளமான போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா். காளைகளை அடக்க முயன்ற 25 வீரா்கள் காயமடைந்தனா். ஜல்லிக்கட்டுத் திடல் அருகே அமைக்கப்பட்டிருந்த மருத்துவ முகாமில், அவா்களுக்கு முதலுதவி சிகிச்சை அளித்தனா். தொடா்ந்து, மேல் சிகிச்சைக்காக 3 போ் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவனைக்கு அனுப்பி வைத்தனா். ஏற்பாடுகளை விழாக் குழுவினா் செய்திருந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...