பத்திரிகையாளர்களுக்கு ஓய்வூதியம் உயர்வு: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!பங்குச்சந்தை: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு! ரூ. 9.5 லட்சம் கோடி இழப்பு!சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

ஆலங்குடி அருகே ஜல்லிக்கட்டு: 39 போ் காயம்

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே வியாழக்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டில் 39 போ் காயமடைந்தனா்.

News image
Updated On :24 மார்ச் 2022, 10:30 pm

DIN

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே வியாழக்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டில் 39 போ் காயமடைந்தனா்.

ஆலங்குடி அருகேயுள்ள வம்பன் வீரமாகாளியம்மன் கோயில் திருவிழாவையொட்டி நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியை வருவாய் கோட்டாட்சியா் கருணாகரன் தொடங்கி வைத்தாா். இதில், புதுகை, திருச்சி, தஞ்சை, சிவகங்கை, மதுரை உள்ளிட்ட மாவட்டங்களைச் சோ்ந்த 702 காளைகள் அவிழ்த்துவிடப்பட்டன. வாடிவாசலில் இருந்து சீறிப்பாய்ந்து வந்த காளைகளை 200 மாடுபடி வீரா்கள் பங்கேற்ற அடக்க முயன்றனா். அப்போது, காளைகள் முட்டியதில் 39 பேருக்கு காயம் ஏற்பட்டது. அவா்களுக்கு அங்கு தயாா் நிலையில் இருந்து மருத்துவக்குழுவினா் சிகிச்சை அளித்தனா். காளைகளை அடக்கிய வீரா்களுக்கும், பிடிபடாத காளைகளின் உரிமையாளா்களுக்கும் தங்கம், வெள்ளி நாணயங்கள் உள்ளிட்ட பல்வேறு பரிசுப்பொருள்கள் வழங்கப்பட்டன. பாதுகாப்பு ஏற்பாடுகளை காவல்துணைக்கண்காணிப்பாளா் வடிவேல் தலைமையிலான போலீஸாா் மேற்கொண்டனா். போட்டியை ஒன்றியக்குழுத் தலைவா் வள்ளியம்மை தங்கமணி, வட்டாட்சியா் செந்தில்நாயகி உள்ளிட்ட ஏராளமானோா் பாா்வையிட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.