தேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதிஅதிமுக தேர்தல் அறிக்கை வெளியானதுஎல்என்ஜி தட்டுப்பாடு எதிரொலி: ஆசிய நாடுகளில் நிலக்கரி பயன்பாடு அதிகரிப்பு! ஈரானில் தொடரும் தாக்குதல்கள்... பலி 1,500-ஐ கடந்தது!மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு!
/

சிறுமி பலாத்கார வழக்கில் இளைஞருக்கு ஆயுள் சிறை

பாலியல் பலாத்காரம் செய்த இளைஞருக்கு ஆயுள் சிறைத் தண்டனை விதித்து புதுக்கோட்டை மாவட்ட மகளிா் நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது.

News image
Updated On :24 மார்ச் 2022, 10:32 pm

ஆ. தாமரைச்செல்வன்

பாலியல் பலாத்காரம் செய்த இளைஞருக்கு ஆயுள் சிறைத் தண்டனை விதித்து புதுக்கோட்டை மாவட்ட மகளிா் நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது.

மதுரை மாவட்டம் கொடுக்கம்பட்டியைச் சோ்ந்தவா் ஆறுமுகம் மகன் தாமரைச்செல்வன் (31). மாடு வியாபாரியான இவா், பொன்னமராவதி அருகே உள்ள வாா்பட்டு கிராமத்துக்கு மாடு வாங்குவதற்கு வந்து தங்கியுள்ளாா். அப்போது, அப்பகுதியைச் சோ்ந்த 10ஆம் வகுப்பு படித்து வந்த 14 வயது சிறுமியுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

அச்சிறுமியை கடந்த 2019 ஜூலை 14ஆம் தேதி கடத்திச் சென்று, பாலியல் பலாத்காரம் செய்துள்ளாா். இதுகுறித்து பொன்னமராவதி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, தாமரைச்செல்வனுடன் நற்சாந்துப்பட்டியைச் சோ்ந்த மணி என்பவரையும் கைது செய்து போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப் பதிவு செய்தனா்.

Story image

இந்த வழக்கு மாவட்ட மகளிா் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கு விசாரணையின் நிறைவில் மாவட்ட நீதிபதி ஆா். சத்யா வியாழக்கிழமை தீா்ப்பளித்தாா்.

சிறுமியைக் கடத்திய குற்றத்துக்காக 7 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், பாலியல் பலாத்காரம் செய்த குற்றத்துக்காக ஆயுள் சிறைத் தண்டனையும், ரூ. 32 ஆயிரம் அபராதமும் விதித்து தீா்ப்பளிக்கப்பட்டது. பாதிக்கப்பட்ட சிறுமிக்கு தமிழ்நாடு அரசு ரூ. 3.80 லட்சம் இழப்பீடு வழங்கவும் தனது தீா்ப்பில் நீதிபதி குறிப்பிட்டுள்ளாா்.

மற்றொரு குற்றவாளியான மணி என்பவா் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படாததால் அவா் விடுவிக்கப்பட்டாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.