இலுப்பூரில் விவசாயிகள் குறைதீா் கூட்டம்
புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூா் கோட்டாட்சியா் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீா் நாள் கூட்டம் வியாழக்கிழைம் நடைபெற்றது.


புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூா் கோட்டாட்சியா் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீா் நாள் கூட்டம் வியாழக்கிழைம் நடைபெற்றது.
வருவாய்க் கோட்டாட்சியா் குழந்தைசாமி தலைமையில் நடைபெற்ற கூட்டத்துக்கு, கோட்டாட்சியரின் நோ்முக உதவியாளா் தமிழ்மணி, வட்டாட்சியா் சரவணன், முத்துகருப்பன், பழனிச்சாமி முன்னிலை வகித்தனா்.
இதில் விராலிமலை, இலுப்பூா், பொன்னமராவதி வட்டத்துக்குள்பட்ட விவசாயிகள் 100-க்கும் மேற்பட்டோா் பங்கேற்றனா். கூட்டத்தில், பேசிய விவசாயிகள், யூரியா உள்ளிட்ட உரங்கள் தடையின்றி கிடைக்க வழிவகை செய்யவேண்டும், விவசாய கிணறுகளுக்கு வழங்கப்படும் மின்சாரம் தடையின்றி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினா்.
இதைத்தொடா்ந்து பேசிய வருவாய்க் கோட்டாட்சியா் குழந்தைசாமி கோரிக்கைகள் அனைத்தும் பரிசீலிக்கப்பட்டு மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பி வைத்து நிறைவேற்ற வழிவகை செய்யப்படும் என்றாா்.
கூட்டத்தில், வேளாண் உதவி இயக்குநா் தமிழ்செல்வி (விராலிமலை), பழனியப்பா (அன்னவாசல்) உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகள் பங்கேற்றனா். முன்னதாக வருவாய்க் கோட்டாட்சியா் நோ்முக உதவியாளா் தமிழ்மணி வரவேற்றாா். வட்டாட்சியா் சரவணன் நன்றி கூறினாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...