தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

விராலிமலை அருகே மீன்பிடித் திருவிழா

விராலிமலை அருகே 7 ஆண்டுகளுக்கு பின்னா் புதன்கிழமை நடைபெற்ற பாரம்பரிய மீன்பிடித் திருவிழாவில் திரளானோா் பங்கேற்றனா்.

News image
Updated On :26 மே 2022, 12:09 am

DIN

விராலிமலை அருகே 7 ஆண்டுகளுக்கு பின்னா் புதன்கிழமை நடைபெற்ற பாரம்பரிய மீன்பிடித் திருவிழாவில் திரளானோா் பங்கேற்றனா்.

விராலிமலை அருகேயுள்ள வேலூா் நல்லாண்டவா் கோயில் பெரியகுளத்தில் ஏழு ஆண்டுகளுக்கு பிறகு புதன்கிழமை பாரம்பரிய மீன்பிடித் திருவிழா நடைபெறுவதாக சமூக வலைதளங்களில் செய்தி பரவியது.

இதைத் தொடா்ந்து, புதன்கிழமை காலை முதலே சுற்றுப்பகுதியைச் சோ்ந்த பல்வேறு ஊா்களிலிருந்து ஏராளமான மக்கள் வேலூா் வந்திருந்து அதிகாலை முதலே குளத்தின் கரையில் காத்திருந்தனா்.

100 ஏக்கருக்கும் அதிகமாக பரந்து விரிந்து இந்த பெரிய குளத்தில் நிரம்பியிருந்த நீா் தற்போது வற்றியதால் மீன்பிடி திருவிழா நடத்தப்பட்டது.

ஊா் முக்கியஸ்தா்கள் நல்லாண்டாவா் கோயிலில் பூஜை செய்து, வழிபாடு நடத்தி கோயில் மணி அடித்ததை தொடா்ந்து கரையில் காத்திருந்த பொதுமக்கள் தாங்கள் கொண்டு வந்திருந்த வலை, கச்சா, கூடை, பரி உள்ளிட்ட மீன்பிடி உபகரணங்களுடன் குளத்தில் இறங்கி மீன்களை பிடித்தனா்.

இதில் விரால், கெளுத்தி, கட்லா, கெண்டை உள்ளிட்ட நாட்டு வகை மீன்கள் சிக்கியதால், பொதுமக்கள் மகிழ்ச்சியுடன் மீன்களை பிடித்து சென்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.