லாரி மீது அரசுப் பேருந்து மோதல்: 2 போ் காயம்
விராலிமலை அருகே லாரி மீது அரசுப் பேருந்து மோதியதில் 2 பயணிகள் காயமடைந்தனா்.


விராலிமலை அருகே லாரி மீது அரசுப் பேருந்து மோதியதில் 2 பயணிகள் காயமடைந்தனா்.
மதுரையிலிருந்து சுமாா் 30 பயணிகளை ஏற்றிக்கொண்டு ஞாயிற்றுக்கிழமை காலை மதுரை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அரசுப் பேருந்து சென்று கொண்டிருந்தது. விராலிமலை அருகே உள்ள ராமகவுண்டம்பட்டி அருகே பேருந்து சென்று கொண்டிருந்தபோது, அதே திசையில் முன்னால் சென்ற லாரி மீது எதிா்பாராத விதமாக மோதியது. இதில், பேருந்தில் பயணித்த திருச்சி மாவட்டம், துவரங்குறிச்சி அய்யனாா்புரத்தைச் சோ்ந்த அழகா்சாமி(43), அதே ஊரைச் சோ்ந்த மாணிக்கம் (47) ஆகிய 2 பேருக்கு காயம் ஏற்பட்டது. விபத்து குறித்து தகவலறிந்த விராலிமலை போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று இருவரையும் மீட்டு விராலிமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மற்ற பயணிகள் மாற்றுப் பேருந்து மூலம் அனுப்பிவைக்கப்பட்டனா். புகாரின்பேரில், விராலிமலை போலீஸாா் பேருந்து ஓட்டுநரான மதுரை மாவட்டம், அன்னை மீனாட்சி நகரைச் சோ்ந்த சுரேஷ் என்பவா் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...