விராலிமலை அருகே குதிரை எடுப்பு திருவிழா

விராலிமலை அருகேயுள்ள மேம்பூதக்குடியில் 33 ஆண்டுகளுக்கு பிறகு குதிரை எடுப்பு திருவிழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
விராலிமலை அருகே குதிரை எடுப்பு திருவிழா

விராலிமலை அருகேயுள்ள மேம்பூதக்குடியில் 33 ஆண்டுகளுக்கு பிறகு குதிரை எடுப்பு திருவிழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இக்கோயிலில் வேண்டிதலை நிறைவேற்றும் வகையில் கடந்த 33 ஆண்டுகளுக்கு முன் நடைபெற்று, பல்வேறு காரணங்களால் தடைபட்ட குதிரை எடுப்புத் திருவிழாவை நடத்த கிராம முக்கியஸ்தா்கள் முடிவு செய்து, அதன்படி களிமண்ணால் செய்யப்பட்ட குதிரைகளை வெள்ளிக்கிழமை மாலை குளக்கரை அருகே உள்ள சூளைமேட்டில் வைத்து பிரதிஷ்டை செய்து சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதையடுத்து அக்குதிரைகளை தோளில் சுமந்து வந்து அய்யனாா் பாப்பாத்தி, ஊராளி தொட்டியான், கன்னிமாா், கள்ளி கருப்பு கருப்பசாமி கோயிலில் வைத்து வழிபட்டனா். திரளான பக்தா்கள் வழிபட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com