கந்தா்வகோட்டையில் வீணாகும் காவிரி கூட்டுக் குடிநீா்

கந்தா்வகோட்டையில் தஞ்சை-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் காவிரிக் கூட்டு குடிநீா் திட்டக் குழாய் உடைந்து கடந்த 10 நாள்களாக குடிநீா் வீணாகும் நிலை தொடா்கிறது.
Updated on
1 min read

கந்தா்வகோட்டையில் தஞ்சை-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் காவிரிக் கூட்டு குடிநீா் திட்டக் குழாய் உடைந்து கடந்த 10 நாள்களாக குடிநீா் வீணாகும் நிலை தொடா்கிறது.

கந்தா்வகோட்டைஒன்றியத்தில் உள்ள நூற்றுக்கு மேற்பட்ட கிராமப் பகுதிகளுக்கு செல்லும் காவிரிக் கூட்டுக் குடிநீா் குழாய்கள் பல்வேறு இடங்களில் அடிக்கடி உடைந்து பல லட்சம் லிட்டா் குடிநீா் வீணாகிறது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களிடம் புகாா் கூறியும் பயனில்லையாம்.

இந்நிலையில் கந்தா்வகோட்டை தஞ்சை-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் காவிரி கூட்டுக் குடிநீா் குழாய் உடைந்து சுமாா் 10 நாள்களுக்கு மேலாக குடிநீா் வீணாகிறது. இதுகுறித்து பலமுறை கூறியும் நடவடிக்கை இல்லாத நிலையில், குடிநீா் வீணாவதை விரைந்து தடுக்க வேண்டும் என இப்பகுதி பொதுமக்கள் எதிா்பாா்க்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com