எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

இலுப்பூர் அருகே இருசக்கர வாகனங்கள் மோதல்: இருவர் பலி

இலுப்பூர் அருகே நள்ளிரவு இரு சக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் நிகழ்விடத்தில் ஒருவர் பலியான நிலையில் மற்றொருவர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இறந்தார். 

News image
கோப்புப்படம்
Updated On :6 நவம்பர் 2023, 6:26 am

DIN

இலுப்பூர் அருகே நள்ளிரவு இரு சக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் நிகழ்விடத்தில் ஒருவர் பலியான நிலையில் மற்றொருவர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இறந்தார்.

புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூர் அருகே உள்ள ராப்பூசல் உடையாம்பட்டியைச் சேர்ந்த அந்தோணி சாமி மகன் புதுமை ராஜா (39). இலுப்பூர் மேட்டு சாலையில் பேக்கரி கடை நடத்தி வரும் இவர் மற்றும் இவரது உறவினரான அதே ஊரைச் சேர்ந்த மனோகர் தாஸ் மகன் ஜோஸ்வா ரென்சன்(13) ஆகிய இருவரும் இருசக்கர வாகனத்தில் இலுப்பூரில் இருந்து விராலிமலை நோக்கிச் சென்று கொண்டிருந்தனர்.

அப்போது எதிரே இருசக்கர வாகனத்தில் வந்த மலைக்குடிபட்டி ஆலிக்காடையைச் சேர்ந்த மூக்கன் மகன் பழனிசாமி (22) ஓட்டி வந்த இரு சக்கர வாகனம் சீத்தப்பட்டி அருகே புதுமை ராஜா வாகனத்தின் மீது மோதியதில் நிகழ்விடத்திலேயே பழனிச்சாமி பலியானார் இதனையடுத்து அவ்வழியே சென்றவர்கள் புதுமை ராஜா மற்றும் ஜோஸ்வா ரென்சனை மீட்டு விராலிமலை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இருப்பினும், அங்கு சிகிச்சை பலனின்றி புதுமை ராஜா இறந்துவிட்டார்.  ஜோஸ்வா ரென்சன் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அங்கு சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து இலுப்பூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.