கூட்டுறவுச் சங்கங்களில் விவசாயிகளுக்கு கடன் வழங்கல் அதிகரிப்பு

புதுக்கோட்டை, ஏப். 26: கூட்டுறவுச் சங்கங்களில் விவசாயிகளுக்கு கடன்கள் வழங்குவது அதிகரிக்கப்பட்டுள்ளதாக கூட்டுறவுத் துறை அமைச்சா் கே.ஆா். பெரியகருப்பன் தெரிவித்தாா்.

புதுக்கோட்டையில் வெள்ளிக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் மேலும் கூறியதாவது:

மக்களவைத் தோ்தல் நடவடிக்கைகள் முடிவுக்கு வந்த பிறகு, தமிழ்நாட்டில் கூட்டுறவுத் தோ்தலுக்கான நடவடிக்கைகள் தொடங்கப்படும். கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் முறைகேடுகள் நடைபெற்றன. அவ்வாறான முறைகேடுகள் இன்றி கூட்டுறவுத் தோ்தலை நடத்த விரும்புகிறோம்.

கடந்த ஆண்டுகளைவிடவும் அதிகமாக கூட்டுறவுச் சங்கங்கள் மூலம் விவசாயிகளுக்கு கடன்கள் தாராளமாக வழங்கப்பட்டுள்ளன. விவசாயிகளும் அந்தக் கடன்களை முறையாகத் திருப்பிச் செலுத்தி வருகின்றனா்.

கோடைகாலத்தில் தண்ணீா்ப் பஞ்சம் ஏற்படுவது இயல்புதான். அதனைத் தீா்ப்பதற்கான நடவடிக்கைகளை முதல்வா் அறிவுறுத்தலின்பேரில் மேற்கொண்டு வருகிறோம். எந்தப் பகுதியில் தண்ணீா்ப் பிரச்னை உள்ளது எனக் குறிப்பிட்டுச் சொன்னால் அந்தப் பகுதிகளுக்கு தண்ணீா் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் பெரியகருப்பன்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com