தேர்தலுக்குப் பின் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக இருக்க மாட்டேன்! - செல்வப்பெருந்தகை காங்கிரஸில் அர்ப்பணிப்போடு பணியாற்றிய பலருக்கு வாய்ப்பு மறுப்பு! - ஜோதிமணி கண்டனம்! மியான்மரின் புதிய அதிபராக ராணுவ அரசின் தலைவர் தேர்வு! அமெரிக்காவின் அதிநவீன எஃப்-15இ போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியது ஈரான்!விஜயின் பெரம்பூர், திருச்சி கிழக்கு வேட்பு மனுக்களில் குறைந்தபட்சம் 6 வேறுபாடு!மகன் தவெகவில் இணைந்தது ஏன்? முன்னாள் பேரவைத் தலைவர் தனபால் விளக்கம்ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த பிரான்ஸின் சரக்கு கப்பல்! போர்க் காலத்தில் முதல்முறை! புதிய நீதி கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்காதது ஏன்? - ஏ.சி. சண்முகம் விளக்கம் காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியீடு! யார் யாருக்கு வாய்ப்பு?
/

வேகுப்பட்டி ஏனமாரியம்மன் கோயில் குடமுழுக்கு விழா

வேகுப்பட்டி ஏனமாரியம்மன் கோயில் குடமுழுக்கு விழா

News image
Updated On :26 ஏப்ரல் 2024, 7:49 pm

பொன்னமராவதி, ஏப். 26: பொன்னமராவதி அருகேயுள்ள வேகுப்பட்டி ஏனமாரியம்மன் கோயில் குடமுழுக்கு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

பழைமையான அம்மன் கோயிலான வேகுப்பட்டி ஏனமாரியம்மன் கோயிலில் ராஜகோபுரம் புதிதாக நிா்மாணிக்கப்பட்டு, திருப்பணிகள் அண்மையில் நிறைவடைந்தன.

குடமுழுக்கு விழாவின் தொடக்கமாக செவ்வாய்க்கிழமை கணபதி ஹோமம், லெட்சுமி ஹோமம், வாஸ்துபூஜை நடைபெற்றது. புதன்கிழமை முதல்கால யாகபூஜையும், வியாழக்கிழமை இரண்டாம், மூன்றாம் கால யாகபூஜைகள் நடைபெற்றது.

குடமுழுக்கு நாளான வெள்ளிக்கிழமை காலை 9.55 மணியளவில் பாலாஜி குருக்கள் தலைமையிலான சிவாச்சாரியாா்கள் யாகசாலையில் வைத்து பூஜிக்கப்பட்ட புனித நீரை கும்பத்தில் ஊற்றி ஏனமாரியம்மன் உடனாய சக்தி விநாயகா் மற்றும் பரிவார தெய்வங்களான இயற்பகை பிள்ளையாா், கருப்பா் உள்ளிட்ட தெய்வங்களின் சந்நிதானங்களுக்கு குடமுழுக்கு செய்தனா். அதையடுத்து ஏனமாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. விழாவில் சுற்றுவட்டார பொதுமக்கள் திரளாக பங்கேற்று வழிபட்டனா்.

பாதுகாப்பு ஏற்பாடுகளை பொன்னமராவதி போலீஸாா் செய்திருந்தனா்.

விழா ஏற்பாடுகளை நாட்டாா், நகரத்தாா், ஊா்ப் பொதுமக்கள் மற்றும் திருப்பணிக் குழு நிா்வாகிகள் செய்திருந்தனா்.