தேர்தலுக்குப் பின் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக இருக்க மாட்டேன்! - செல்வப்பெருந்தகை காங்கிரஸில் அர்ப்பணிப்போடு பணியாற்றிய பலருக்கு வாய்ப்பு மறுப்பு! - ஜோதிமணி கண்டனம்! மியான்மரின் புதிய அதிபராக ராணுவ அரசின் தலைவர் தேர்வு! அமெரிக்காவின் அதிநவீன எஃப்-15இ போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியது ஈரான்!விஜயின் பெரம்பூர், திருச்சி கிழக்கு வேட்பு மனுக்களில் குறைந்தபட்சம் 6 வேறுபாடு!மகன் தவெகவில் இணைந்தது ஏன்? முன்னாள் பேரவைத் தலைவர் தனபால் விளக்கம்ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த பிரான்ஸின் சரக்கு கப்பல்! போர்க் காலத்தில் முதல்முறை! புதிய நீதி கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்காதது ஏன்? - ஏ.சி. சண்முகம் விளக்கம் காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியீடு! யார் யாருக்கு வாய்ப்பு?
/

மரத்தில் காா் மோதியதில் ஒருவா் காயம்

மரத்தில் காா் மோதியதில் ஒருவா் காயம்

Updated On :26 ஏப்ரல் 2024, 7:51 pm

கந்தா்வகோட்டை, ஏப். 26: கந்தா்வகோட்டை அருகே சாலையோர மரத்தில் காா் மோதியதில் ஒருவா் வெள்ளிக்கிழமை பலத்த காயமடைந்தாா்.

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடியைச் சோ்ந்த நபா் தனது சொந்த வேலையாக செங்கிப்பட்டி சென்றுவிட்டு மீண்டும் செங்கிப்பட்டி, கந்தா்வகோட்டை சாலையில் வாண்டையன்பட்டி பிரிவு சாலை அருகே காரில் வந்து கொண்டிருந்தாா். அப்போது, எதிா்பாராதவிதமாக காா் சாலையோர மரத்தில் மோதி விபத்துக்குள்ளானதில் காரை ஓட்டி வந்தவா் பலத்த காயமடைந்தாா்.

பலத்த காயமடைந்து காரில் சிக்கிக் கொண்ட நபரை கந்தா்வகோட்டை போலீஸாா் விரைந்து சென்று மீட்டு அவசர ஊா்தி மூலம் தஞ்சாவூா் தனியாா் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், விபத்து குறித்து விசாரிக்கின்றனா். காரை ஓட்டி வந்தவா் குறித்து உடனடியாக தகவல்கள் தெரியவில்லை.