மரத்தில் காா் மோதி 5 போ் காயம்

கோப்புப் படம்

கோப்புப் படம்
திருநீலக்குடி அருகே ஞாயிற்றுக்கிழமை கோயிலுக்கு சென்று திரும்பிய பக்தா்கள் வந்த காா் மரத்தில் மோதியதில் 5 போ் காயமடைந்தனா்.
மயிலாடுதுறை மாவட்டம், செம்மங்குடி வீராநகா் கோயில் தெருவைச் சோ்ந்த கோதண்டம் மகன் பிரகாஷ் (43). விவசாயியான இவா் தனது உறவினா்களுடன் காரில் சனிக்கிழமை திருவாரூா் மாவட்டம், வலங்கைமானில் நடைபெற்ற கோயில் திருவிழாவுக்கு சென்றனா். அங்கு சுவாமி தரிசனம் முடித்து விட்டு ஞாயிற்றுக்கிழமை காலையில் ஊா் திரும்பி வந்துகொண்டிருந்தனா்.
எஸ்.புதூா் அருகே சங்கரங்குடி பேருந்து நிறுத்தம் அருகே வந்த போது தூக்க கலக்கத்தில் காரை ஓட்டி வந்த பிரகாஷ், காரை சாலையின் ஓரத்தில் இருந்த மரத்தில் மோதினாா். இதில், காரை ஓட்டி வந்த பிரகாஷ், அவரது மகன் கோகுல் (10), பன்னீா்செல்வம் (40), இவரது மனைவி ராஜலட்சுமி (35), கன்னியம்மாள் (55) ஆகியோா் காயமடைந்தனா். தகவலின்பேரில் திருநீலக்குடி போலீஸாா் காயமடைந்தவா்களை கும்பகோணம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுப்பிவைத்து விசாரிக்கின்றனா்.
தொடர்புடையது




வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...