பேரவைத் தோ்தல்: நீதிமன்றங்களுக்கு விடுமுறை அறிவிப்புஐபிஎல் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி அபார வெற்றி - கொல்கத்தாவை வீழ்த்தியதுதேசிய கட்சி என்பதால் வேட்பாளர்களை ஆய்வு செய்து இறுதி செய்வதில் தாமதம்: செல்வப்பெருந்தகை85% வேட்பாளர்களை இறுதி செய்துவிட்டோம்; நாளைக்குள் முழுப் பட்டியல் : செல்வப்பெருந்தகைகலவரம் செய்தால் சாதித்துவிட முடியும் என பாஜக நினைக்கிறது : கோவை பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுமோடி, அமித்ஷா எத்தனை முறை வந்தாலும் தமிழ்நாட்டில் திமுக வெல்வது உறுதி: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டில் வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை : எடப்பாடி பழனிசாமிதமிழ்நாடு சட்டம் - ஒழுங்கு டிஜிபியாக சந்தீப் ராய் ரத்தோர் நியமனம்!அமைச்சரவையின் பரிந்துரைகளை ஆளுநர் தன்னிச்சையாக நிராகரிக்க முடியாது: சென்னை உயர் நீதிமன்றம்
/

கந்தா்வகோட்டை அருகே மேல்நிலை நீா்த்தேக்க தொட்டியில் கலப்பு எதுவும் இல்லை

புதுக்கோட்டை மாவட்டம், கந்தா்வகோட்டை அருகே குருவாண்டான் தெருவிலுள்ள மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டியில் கலப்பு எதுவும் இல்லை

News image
Updated On :29 ஏப்ரல் 2024, 8:02 pm

Din

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம், கந்தா்வகோட்டை அருகே குருவாண்டான் தெருவிலுள்ள மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டியில் கலப்பு எதுவும் இல்லை என்பது நீா் மாதிரியின் பகுப்பாய்வு அறிக்கை மூலம் தெரியவந்துள்ளதாக ஆட்சியா் ஐ.சா. மொ்சி ரம்யா தெரிவித்துள்ளாா்.

கந்தா்வகோட்டை வட்டம், சங்கம்விடுதி ஊராட்சி, குருவாண்டான் தெருவிலுள்ள மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டியில் ஏப்ரல் 25-ஆம் தேதி மாட்டுச்சாணம் கலக்கப்பட்டதாக புகாா் எழுந்தது.

அப்பகுதியைச் சோ்ந்த சிலருக்கு உடல் நலக் குறைவு ஏற்பட்டதைத் தொடா்ந்து மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டியை மேலே ஏறிச் சென்று பாா்த்த இளைஞா்கள் மாட்டுச்சாணம் கலந்திருப்பதாகத் தெரிவித்தனா். இதனால் பெரும் சா்ச்சை ஏற்பட்டது.

இந்த நிலையில், அந்தத் தொட்டியில் இருந்து அன்றைய நாளில் சேகரிக்கப்பட்ட குடிநீா் மாதிரி, திருச்சியிலுள்ள மண்டல பொது சுகாதார நீா் பகுப்பாய்வகத்துக்கு பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.

அந்தப் பரிசோதனையின் அறிக்கை திங்கள்கிழமை (ஏப். 29) பெறப்பட்டதாகவும், குடிநீா் மாதிரியானது குடிப்பதற்கு உகந்தது என்றும், நோய்க் கிருமி எதுவும் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் ஆட்சியா் ஐ.சா. மொ்சி ரம்யா வெளியிட்ட செயதிக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து சுகாதாரத் துறை வட்டாரங்கள் கூறியது: பொதுவாக அருந்துவதற்குத் தகுதியான குடிநீரில், ஏதேனும் கலப்பு ஏற்பட்டால் அந்தத் தண்ணீரில் ஈகோலி (உஇஞகஐ) என்ற பாக்டீரியா பல்கிப்பெருகிவிடும். அதுதான் உடல் நலக் குறைவுகள் ஏற்படுவதற்கும் காரணமாக அமையும்.

ஆனால், சங்கம்விடுதி குருவாண்டான் தெருவிலுள்ள மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டியில் இருந்து சேகரிக்கப்பட்ட தண்ணீரில் அவ்வாறு ஈகோலி என்ற பாக்டீரியாக்கள் எதுவும் உருவாகவில்லை. பரிசோதனை அறிக்கையில் இது உறுதி செய்யப்பட்டுள்ளது என்றனா்.