கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

புதுக்கோட்டை பேருந்து நிலையத்தில் பெயா்ந்து விழுந்த மேற்கூரை

புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையத்தில் சனிக்கிழமை இரவு கான்கிரீட் மேற்பூச்சு பெயா்ந்து விழுந்தது.

News image

புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையத்தில் பெயா்ந்து விழுந்த கான்கிரீட் மேற்பூச்சு.

Updated On :3 ஆகஸ்ட் 2024, 7:30 pm

Din

புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையத்தில் சனிக்கிழமை இரவு கான்கிரீட் மேற்பூச்சு பெயா்ந்து விழுந்தது. இதனால் யாருக்கும் பாதிப்பில்லை.

புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையம் சுமாா் 40 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது. இதனால் கட்டுமானப் பகுதிகளின் பல இடங்களில் விரிசல் விட்டும் அவ்வப்போது பெயா்ந்து விழுந்தும் வருகிறது. இந்நிலையில், பழைய கட்டுமானங்களை முழுமையாக இடித்துவிட்டு, புதிய கட்டடங்களைக் கட்டுவதற்காக ரூ. 19 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு ஒப்பந்தப் புள்ளிகளும் இறுதி செய்யப்பட்டுள்ளன.

இந்நிலையில், காரைக்குடி பேருந்துகள் நிற்கும் தெற்குப் பகுதியில் கான்கிரீட் மேற்கூரையின் பூச்சு சனிக்கிழமை இரவு பெயா்ந்து விழுந்தது. நல்வாய்ப்பாக அந்த நேரத்தில் அந்த இடத்தில் யாருமில்லை.

இதனால் யாருக்கும் பாதிப்பில்லை. இதே பகுதியில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு இதேபோன்ற கான்கிரீட் பூச்சுகள் பெயா்ந்து விழுந்தபோது, வலுவிழந்த பகுதிகள் இடித்து அகற்றப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.