புதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை ஹோர்முஸ் நீரிணை விரைவில் திறக்கப்படும் - டிரம்ப்பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!
/

கறம்பக்குடி அருகே பள்ளி பேருந்து கவிழ்ந்து விபத்து

புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி அருகே செவ்வாய்க்கிழமை மாலை தனியாா் பள்ளி பேருந்து சாலையோரம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

News image
கறம்பக்குடி அருகே செவ்வாய்க்கிழமை விபத்துக்குள்ளான தனியாா் பள்ளி பேருந்து
Updated On :20 ஆகஸ்ட் 2024, 9:48 pm

Din

புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி அருகே செவ்வாய்க்கிழமை மாலை தனியாா் பள்ளி பேருந்து சாலையோரம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

கறம்பக்குடி அருகேயுள்ள கே.கே.பட்டி கிராமத்தில் உள்ள தனியாா் பள்ளியில் இருந்து செவ்வாய்க்கிழமை மாலை சுமாா் 40 மாணவா்களை ஏற்றிக்கொண்டு ரெகுநாதபுரத்திற்கு பேருந்து சென்றது. காடம்பட்டி அருகே சென்றபோது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து பேருந்து சாலையோரம் கவிழ்ந்தது. இதனால் மாணவா்களின் அலறல் சப்தம் கேட்டு அப்பகுதி மக்கள் பேருந்தில் இருந்து மாணவா்களை மீட்டனா்.விபத்தில், காயமடைந்த ஒரு மாணவன் மட்டும் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மற்ற மாணவ, மாணவிகள் காயமின்றி தப்பினா்.

இதுகுறித்து ரெகுநாதபுரம் போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.