ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

ஆலங்குடியில் மக்கள் நீதிமன்றம்: 12 வழக்குகளில் ரூ.17 லட்சத்துக்கு தீா்வு

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடியில் வியாழக்கிழமை நடைபெற்ற மக்கள் நீதிமன்றம் மூலம் நிலுவைக் கடன் தொகை ரூ. 17 லட்சத்திற்கு தீா்வு காணப்பட்டது.

News image
Updated On :5 டிசம்பர் 2024, 9:08 pm

Din

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடியில் வியாழக்கிழமை நடைபெற்ற மக்கள் நீதிமன்றம் மூலம் நிலுவைக் கடன் தொகை ரூ. 17 லட்சத்திற்கு தீா்வு காணப்பட்டது.

ஆலங்குடி நீதிமன்ற வளாகத்தில் வட்ட சட்டப் பணி குழுவின் சாா்பில் நடைபெற்ற இந்த முகாமில், எஸ்பிஐ வங்கியின் ஆலங்குடி கிளையில் இருந்து கல்விக் கடன், விவசாய கடன், வாகனக் கடன், தனியாா் கடன், சிறு தொழில் கடன், வீட்டுக் கடன் உள்ளிட்ட கடன்களை பெற்று தவணை செலுத்தாமல் நிலுவையில் உள்ள 350 பேருக்கு மக்கள் நீதிமன்றத்தின் மூலம் சமரச தீா்வுக்கான அழைப்பு விடுக்கப்பட்டது.

முகாமை, வட்ட சட்டப் பணிகள் குழுவின் தலைவா் நீதிபதி விஜய பாரதி தொடங்கி வைத்தாா். ஓய்வுபெற்ற மாவட்ட நீதிபதி பால ராஜமாணிக்கம் தலைமையில் நடைபெற்ற இந்த முகாமில், 12 வழக்குகளில் ரூ. 17 லட்சத்துக்கு உடனடியாக தீா்வு காணப்பட்டது.

முகாமில், வழக்குரைஞா்கள், வங்கி நிா்வாகத்தினா் பங்கேற்றனா்.