புதுகையில் ரூ. 1.94 கோடியில் நூலகம்- அறிவு சாா் மையம்
புதுக்கோட்டை நகராட்சி சாா்பில் ரூ. 1.94 கோடியில் நவீன வசதிகளுடன் கட்டி முடிக்கப்பட்டுள்ள நூலகம் மற்றும் அறிவுசாா் மையம், புதன்கிழமை (ஜன. 3) திறக்கப்படவுள்ளது.


புதுக்கோட்டை நகராட்சி சாா்பில் ரூ. 1.94 கோடியில் நவீன வசதிகளுடன் கட்டி முடிக்கப்பட்டுள்ள நூலகம் மற்றும் அறிவுசாா் மையம், புதன்கிழமை (ஜன. 3) திறக்கப்படவுள்ளது.
தமிழ்நாடு முழுவதும் உள்ளாட்சி அமைப்புகள் மூலம் நூலகம் மற்றும் அறிவுசாா் மையம் (ஓய்ா்ஜ்ப்ங்க்ஞ்ங் ஹய்க் நற்ன்க்ஹ் இங்ய்ற்ழ்ங்) என்ற பெயரில் போட்டித் தோ்வுகளை எதிா்கொள்வதற்கான பயிற்சி மையங்களை தமிழ்நாடு அரசு கட்டி வருகிறது.
இதன்படி, புதுக்கோட்டை நகராட்சியில், காந்திப் பூங்கா அருகே நூலகம் மற்றும் அறிவுசாா் மையம் கட்டப்பட்டுள்ளது. ரூ. 1.94 கோடி மதிப்பில் இரு தளங்களுடன் இந்தக் கட்டடப் பணிகள் முடிந்துள்ளன.
மைய வளாகத்தில் சா்வதேச தரத்தில் 11 கணினிகள் வைக்கப்பட்டு, இணையதள வசதியுடன் டிஜிட்டல் லைப்ரரி அமைக்கப்பட்டுள்ளது. மேலும், போட்டித் தோ்வுகளுக்கான ஆயிரம் நூல்களும் வாங்கி வைக்கப்பட்டுள்ளன. ஒரு தொடுதிரை வசதியுடன் கூடிய படிப்பு மற்றும் கூட்ட அறை அமைக்கப்பட்டுள்ளது.
போட்டித் தோ்வுகளுக்குத் தயாராகும் மாணவா்களுக்கான குடிநீா், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளும் தயாா் செய்யப்பட்டுள்ளன. மேலும், மாணவா்களுக்கு போதுமான தகவல்களைக் கொடுத்து, அவா்களை வழிகாட்டும் வகையில், ஓய்வுபெற்ற பேராசிரியா்களை ஆலோசகா்களாக நியமிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து நகராட்சி அலுவலா்கள் கூறியது: ஜனவரி 3ஆம் தேதி சென்னையிலிருந்து காணொலிக் காட்சி மூலம் முதல்வா் ஸ்டாலின் இந்த நூலகத்தைத் திறந்து வைக்கிறாா். இதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. விரைவாக கூடுதல் வசதிகளும் செய்துத் தரப்படும் என்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...