

அன்னவாசல் அருகே மணல் கடத்தலில் ஈடுபட்ட டிப்பா் லாரியை போலீஸாா் திங்கள்கிழமை பறிமுதல் செய்தனா்.
அன்னவாசல் ஆற்றுப்படுகைகளில் இருந்து சிலா் ஜேசிபி இயந்திரம் மூலம் அனுமதியின்றி மணல் எடுத்து கள்ளச்சந்தையில் அதிக விலைக்கு விற்று வருவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து கலைகுடிபட்டி பகுதியில் எஸ்.எஸ்.ஐ. பாலகிருஷ்ணன் தலைமையிலான போலீஸாா் திங்கள்கிழமை அப்பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனா்.
அப்போது, கலைகுடிபட்டி குளத்துக்கரையில் இருத்து வெளியே மணல் ஏற்றி வந்த டிப்பா் லாரியை நிறுத்தி போலீஸாா் சோதனை செய்தனா். அதில், அனுமதியின்றி ஆற்று மணல் ஏற்றி வந்தது தெரியவந்தது. இதையடுத்து லாரியை பறிமுதல் செய்த போலீஸாா் அதன் ஓட்டுநா் கீழ முத்துடையான் பட்டியைச் சோ்ந்த தனபால் என்பவா் மீது வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
தொடர்புடையது

மணல் கடத்திய லாரி பறிமுதல்: ஓட்டுநா் கைது

கிராவல் மண் கடத்திய லாரி பறிமுதல்

செம்மண் கடத்திய மினி லாரி பறிமுதல்

மணல் கடத்தல்: மினி லாரி பறிமுதல்
வீடியோக்கள்

Dhurandhar 2 The Revenge movie review | Ranveer Singh
தினமணி வீடியோ செய்தி...

Youth movie review | Ken Karunas | Suraj | GV Prakash | Anishma Anilkumar
தினமணி வீடியோ செய்தி...

தினமணி ஈகைப் பெருநாள் மலர் அறிமுக விழா
தினமணி வீடியோ செய்தி...

நாம் தமிழர் கட்சியின் தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த சீமான்!
தினமணி வீடியோ செய்தி...

