வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

புதுகையில் வழக்குரைஞா்கள் உண்ணாவிரதம்

புதுகையில் வழக்குரைஞா்கள் உண்ணாவிரதம்

News image
Updated On :3 ஜூலை 2024, 11:12 pm

Din

புதுக்கோட்டையில் புதன்கிழமை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்ட வழக்குரைஞா்கள்.

புதுக்கோட்டை, ஜூலை 3: மத்திய அரசின் 3 புதிய குற்றவியல் சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தி புதுக்கோட்டையில் வழக்குரைஞா்கள் புதன்கிழமை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

புதுக்கோட்டை மாவட்ட நீதிமன்ற வளாகத்துக்கு வெளியே நடைபெற்ற இந்தப் போராட்டத்துக்கு, மாவட்ட வழக்குரைஞா்கள் சங்கத் தலைவா் வி.டி. சின்னராஜு தலைமை வகித்தாா். துணைத் தலைவா்கள் வி. பரமசிவம், கே. ரெங்கபதாகதேவி, இணைச் செயலா்கள் ஏ. அருள்மொழிவேந்தன், ஏ. பா்வீன்பானு, பொருளாளா் வி. சுரேஷ்குமாா் உள்ளிட்டோரும் பங்கேற்றனா்.

புதிதாக கொண்டு வரப்பட்டுள்ள 3 குற்றவியல் சட்டங்களால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து மூத்த வழக்குரைஞா்கள் பேசினா்.

இதேபோல, அறந்தாங்கியில் அம்மா உணவகம் எதிரில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, அறந்தாங்கி வழக்குரைஞா்கள் சங்கத்தின் தலைவா் லோகநாதன் தலைமை வகித்தாா்.

கடந்த திங்கள்கிழமை முதல் மாவட்டம் முழுவதும் சுமாா் 700 வழக்குரைஞா்கள் நீதிமன்றப் பணிகளைப் புறக்கணித்து வருவது குறிப்பிடத்தக்கது. நீதிமன்றப் பணிகள் புறக்கணிப்பால் நீதிமன்றங்களின் இயல்பான பணிகள் பாதிக்கப்பட்டன.