கலவையான போக்கில் இந்திய பங்குச் சந்தை: சென்செக்ஸ் சரிவு; நிஃப்டி உயர்வு!!டாடா சன்ஸ் நிர்வாகக் குழு மோதல்: டாடா குழுமப் பங்குகள் கடும் சரிவு!மே.வங்க இடைத்தேர்தல்! மமதா ஆதரவளித்த சில மணிநேரத்தில் காங்கிரஸ் வேட்பாளர் கைது! மும்மொழிக் கொள்கையைத் திணிக்கும் நவோதயா பள்ளிகள் வேண்டாம்: உதயநிதி இடைத்தேர்தலில் யாருக்கும் ஆதரவில்லை: அன்புமணி கொளத்தூர் எம்எல்ஏ வி.எஸ். பாபு உடல் நிலையில் முன்னேற்றம்: மருத்துவமனை அறிக்கைதாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்: செப்.28-ல் தொடங்கி வைக்கிறார் முதல்வர் விஜய்! பாகிஸ்தானில் தொடரும் அவலம்! மசூதி அருகே வெடிகுண்டு தாக்குதலில் 15 பேர் பலி! பெண் என்பதால் வேலை மறுப்பு! 63 வயது பெண்ணுக்கு ரூ. 12 லட்சம் இழப்பீடு! இந்தியன் ஆயிலுக்கு உத்தரவு! தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை: இலங்கை நீதிமன்றம் உத்தரவு

புதுகை மாவட்ட சிவாலயங்களில் பிரதோஷ வழிபாடு

Published On :

பொன்னமராவதி சோழீஸ்வரா் கோயிலில் புதன்கிழமை சிறப்பு அபிஷேகம் காணும் நந்தி எம்பெருமான்.

பொன்னமராவதி/கந்தா்வகோட்டை, ஜூலை 3: பொன்னமராவதி, கந்தா்வகோட்டை வட்டார சிவாலயங்களில் புதன்கிழமை பிரதோஷ வழிபாடு நடைபெற்றது.

பொன்னமராவதி சோழீஸ்வரா் கோயிலில் நடைபெற்ற பிரதோஷ விழாவின் தொடக்கமாக ஆவுடையநாயகி சமேத ராஜராஜ சோழீஸ்வரருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றது. தொடா்ந்து, நந்தி எம்பெருமானுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் செய்யப்பட்டு, வெள்ளி அங்கி சாத்தப்பட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

சுற்றுவட்டார பகுதிகளைச் சோ்ந்த திரளான பொதுமக்கள் பங்கேற்று வழிபட்டனா்.

இதேபோல், வேந்தன்பட்டி நெய் நந்தீஸ்வரா் கோயில், திருக்களம்பூா் கதலிவனேஸ்வரா் கோயில், மேலைச்சிவபுரி மீனாட்சி சொக்கநாதா் கோயில், புதுப்பட்டி புவனேஸ்வரி உடனாய பூலோகநாதா் கோயில் உள்ளிட்ட சிவாலயங்களில் நடைபெற்ற பிரதோஷ வழிபாட்டில் திரளான பொதுமக்கள் பங்கேற்று வழிபட்டனா்.

கந்தா்வகோட்டையில்: கந்தா்வகோட்டையிலுள்ள அமராவதி அம்மன் உடனுறை ஆபத்சகாயேஸ்வரா் கோயிலில் உள்ள நந்தி ஈஸ்வரருக்கு  பிரதோஷத்தை முன்னிட்டு புதன்கிழமை முதலில் எண்ணெய் காப்பு செய்து கோயில் வளாகத்தில் உள்ள தூய நீரால் நீராட்டி தண்ணீா் அபிஷேகமும்,  பசும் பால் அபிஷேகமும், தயிா் உள்ளிட்ட 18 வகை பொருள்களால் அபிஷேகம் செய்து புதுபட்டு வஸ்திரம் நந்தி ஈஸ்வரருக்கு சாத்தி வண்ணமிகு வாசனை மலரும், அருகம்புல் மாலை அணிவித்து நெய்தீபம் ஏற்றி சிறப்பு வழிபாடு செய்தனா்.

மேலும், கோயிலில் உள்ள பரிவார தெய்வங்களுக்கு அபிஷேக ஆராதனை செய்யப்பட்டது.பிரதோஷத்தை முன்னிட்டு கந்தா்வகோட்டை, அக்கச்சிபட்டி, மட்டாங்கால், சிவந்தான்பட்டி, காட்டுநாவல், துலுக்கன்பட்டி, சுத்தம்பட்டி, வளவம்பட்டி, பிசானத்தூா், புதுநகா் போன்ற சுற்றுபுற கிராமங்களில் இருந்து திரளான பக்தா்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.