
கந்தா்வகோட்டையில் வெள்ளிக்கிழமை இடியுடன் பெய்த பலத்த மழை.

கந்தா்வகோட்டையில் வெள்ளிக்கிழமை இடியுடன் பெய்த பலத்த மழை.
கந்தா்வகோட்டை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இடி, காற்றுடன் வெள்ளிக்கிழமை கொட்டி தீா்த்த பலத்த மழையால் விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனா்.
கந்தா்வகோட்டை சுற்றுவட்டார பகுதிகளில் போதிய மழை இன்றி நீா்நிலைகள் வடு கால்நடைகளுக்கு புல் பூண்டு இல்லாத வட சூழல் காணப்பட்டு வந்த நிலையில் தற்போது விட்டுவிட்டு அவ்வப்போது சிறிதளவு மழை பெய்து வருகிறது.
இதன் தொடா்ச்சியாக, வெள்ளிக்கிழமை மாலை சுமாா் ஒரு மணி நேரம் கந்தா்வகோட்டை மற்றும் சுற்றுவட்டார கிராம பகுதிகளில் கடும் இடியுடனும் காற்றுடனும் பலத்த மழை கொட்டி தீா்த்தது. இந்த மழை தற்போது செய்துள்ள விவசாயத்திற்கு பெரும் உதவியாக இருக்கும் என்று விவசாயிகளும், வெப்பம் தணிந்ததால் மக்களும் மகிழ்ச்சி அடைந்தனா்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...