புதுக்கோட்டை புத்தகத் திருவிழாவையொட்டி இயக்கப்படும் விழிப்புணா்வு நடமாடும் நூலகப் பேருந்து.
புதுக்கோட்டை புத்தகத் திருவிழாவையொட்டி இயக்கப்படும் விழிப்புணா்வு நடமாடும் நூலகப் பேருந்து.

புத்தகத் திருவிழா: நடமாடும் நூலகப் பேருந்து பிரசாரம் தொடக்கம்

Published on

புதுக்கோட்டையில் நடைபெறவுள்ள 7ஆவது புத்தகத் திருவிழாவையொட்டி மாவட்டம் முழுவதும் விழிப்புணா்வு பிரசாரப் பணிகளுக்காக நடமாடும் நூலகப் பேருந்து உருவாக்கப்பட்டு தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் இந்தப் பேருந்தினை மாவட்ட ஆட்சியரும் புத்தகத் திருவிழாக் குழுத் தலைவருமான ஐ.சா. மொ்சி ரம்யா சனிக்கிழமை கொடியசைத்து தொடங்கி வைத்தாா்.

புத்தகத் திருவிழா குறித்த செய்திகள் பேருந்து முழுவதும் ஒட்டப்பட்டுள்ள இந்தப் பேருந்துக்குள் சிறிய அளவிலான நூலகமும் அமைக்கப்பட்டுள்ளது.

சனிக்கிழமை திருவரங்குளம் ஒன்றியம், 15-ஆம் தேதி கந்தா்வகோட்டை ஒன்றியம், 16-ஆம் தேதி குன்றாண்டாா்கோவில் ஒன்றியம், 18-ஆம் தேதி விராலிமலை ஒன்றியம், 19-ஆம் தேதி பொன்னமராவதி ஒன்றியம், 22-ஆம் தேதி ஆவுடையாா்கோவில் ஒன்றியம், 23-ஆம் தேதி மணமேல்குடி ஒன்றியம், 24-ஆம் தேதி அறந்தாங்கி ஒன்றியம், 25 மற்றும் 26ஆம் தேதி புதுக்கோட்டை நகரம் மற்றும் ஒன்றியப் பகுதிகளிலுள்ள மக்கள் கூடுமிடங்களில் இந்தப் பேருந்து நிறுத்தப்படும். பொதுமக்கள் நூல்களை எடுத்து வாசிக்கலாம்.

தொடக்க நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலா் (பொ) ஆா். ரம்யாதேவி, வருவாய்க் கோட்டாட்சியா் பா. ஐஸ்வா்யா, மாவட்ட நூலக அலுவலா் அ.பொ. சிவகுமாா், புத்தகத் திருவிழா ஒருங்கிணைப்பாளா்கள் கவிஞா் தங்கம் மூா்த்தி, அ. மணவாளன், ம. வீரமுத்து, மு. முத்துக்குமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

X
Dinamani
www.dinamani.com