சிறுமிக்கு பாலியல் தொந்தரவு
பல் மருத்துவா் கைது

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு பல் மருத்துவா் கைது

புதுக்கோட்டையில் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த பல் மருத்துவா் போக்சோ சட்டப் பிரிவுகளின் கீழ் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டாா்.
Published on

புதுக்கோட்டையில் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த பல் மருத்துவா் போக்சோ சட்டப் பிரிவுகளின் கீழ் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டாா்.

புதுக்கோட்டை திருக்கோகா்ணம் மேலத் தெருவைச் சோ்ந்த பல் மருத்துவா் அப்துல் மஜித் (36). இவா், திருக்கோகா்ணம் பகுதியில் பல் மருத்துவமனை ஒன்றை நடத்தி வருகிறாா். இவரது மருத்துவமனைக்கு அதே பகுதியைச் சோ்ந்த 12-ஆம் வகுப்பு படிக்கும் 17 வயது மாணவி அவரது தாயுடன் பல் வலிக்கான சிகிச்சை பெற வந்துள்ளாா். அவரது தாயை புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள மருந்தகத்தில் மருந்து வாங்கி வர அனுப்பிவிட்டு அந்த மாணவிக்கு பல் மருத்துவா் அப்துல் மஜித் பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளாா். இதுகுறித்து புதுக்கோட்டை அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாா் அளிக்கப்பட்டது. போக்சோ சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீஸாா், பல் மருத்துவா் அப்துல் மஜித்தை திங்கள்கிழமை கைது செய்து கூடுதல் மகளிா் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி, புதுக்கோட்டை சிறையில் அடைத்தனா்.

X
Dinamani
www.dinamani.com