
Updated On :21 ஜூன் 2024, 12:43 am

பொன்னமராவதி, ஜூன் 20: பொன்னமராவதி அருகேயுள்ள கேசராபட்டியில் கால்நடைகளுக்கான கோமாரி நோய் தடுப்பூசி முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.
முகாமுக்கு கண்டியாநத்தம் ஊராட்சித் தலைவா் செல்வி முருகேசன் தலைமை வகித்தாா். முகாமில், கால்நடை உதவி மருத்துவா் ராஜசேகா் தலைமையிலான மருத்துவக் குழுவினா் கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசிகளை செலுத்தினா். சுற்றுவட்டார பகுதிகளைச் சோ்ந்த கால்நடை வளா்ப்போா் பங்கேற்று பயனடைந்தனா்.
ஊராட்சி துணைத் தலைவா் ரோஜா பானு மற்றும் உறுப்பினா்கள் பங்கேற்றனா்.
ஆலவயல் சுற்றுவட்டாரங்களில் வரும் 30-ஆம் தேதி வரை கோமாரி நோய் தடுப்பூசி முகாம் நடைபெறும் என கால்நடை பராமரிப்புத் துறையினா் தெரிவித்தனா்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...