தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

விராலிமலை முருகன் மலைக் கோயிலில் ‘லிப்ட்’ சுவரை அழகுபடுத்தும் பணி

விராலிமலை முருகன் மலைக்கோயிலில் ‘லிப்ட்’ சுவரை அழகுபடுத்தும் பணி

News image
Updated On :26 ஜூன் 2024, 10:17 pm

Din

விராலிமலை, ஜூன் 26: விராலிமலையில் முருகன் மலைக்கோயிலில் அமைக்கப்பட்டு, விரைவில் பயன்பாட்டுக்கு வரவுள்ள மின்தூக்கியின் (லிப்ட்) வெளிப்புறச் சுற்றுச்சுவரை அழகுபடுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

விராலிமலையில் அமைந்துள்ள 207 படிகள் கொண்ட முருகன் மலைக்கோயில் பல்வேறு சிறப்புகள் கொண்ட தலமாகும். கோயிலுக்கு படிகள் வழியாக சென்று வந்த நிலையில், மலை அடிவாரத்திலிருந்து மலை மேல் உள்ள இடும்பா் கோயில் சந்நிதி வரை 2021-இல் தாா்ச்சாலை அமைக்கப்பட்டது. இந்தச் சாலை முடியும் இடத்திலுள்ள வாகனம் நிறுத்தும் இடத்திலிருந்து வயதான பக்தா்கள், மாற்றுத்திறனாளிகள் மணிமண்டபம் வரை செல்லும் வகையில் 2 மின்தூக்கிகள் அமைக்கப்பட்டுள்ளது. அவை விரைவில் பயன்பாட்டுக்கு வரவுள்ளன.

இதன் வெளிப்புறச் சுற்றுச்சுவரை அழகுபடுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. அந்தச் சுவரில் தனியாா் பங்களிப்புடன் வள்ளி, தெய்வானை சமேதராக முருகன், மலைக்கோயில் படங்கள் வரையப்பட்டு வருகின்றன. வண்ணம் தீட்டு பணிகள் நடைபெற்று பணிகள் விரைவில் நிறைவடைய உள்ளன.