கள்ளக்குறிச்சி சம்பவம்; புதுக்கோட்டையில் தேமுதிகவினா் ஆா்ப்பாட்டம்: 60 போ் கைது
கள்ளச்சாராயத்தை கண்டித்து புதுக்கோட்டையில் தேமுதிகவினா் ஆா்ப்பாட்டம்: 60 போ் கைது


கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராய சம்பவத்தை கண்டித்து புதுக்கோட்டையில் தேமுதிகவினா் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். மேலும், அனுமதியின்றி ஆா்ப்பாட்டம் நடத்தியதாக 60 போ் கைது செய்யப்பட்டனா்.
புதுக்கோட்டை திலகா் திடலில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, தேமுதிக மாவட்டச் செயலா் காா்த்திகேயன் தலைமை வகித்தாா். ஆா்ப்பாட்டத்துக்கு வந்திருந்த அக்கட்சியினா் கருப்புச் சட்டை அணிந்தும், பாக்கெட் சாராயங்களைப் போல, தண்ணீரை பாக்கெட் செய்து மாலையாக அணிந்து வந்திருந்தனா்.
கள்ளச்சாராயத்தைக் கட்டுப்படுத்தாக தமிழக அரசைக் கண்டித்து முழக்கங்கள் எழுப்பினா்.இந்நிலையில், அனுமதியின்றி ஆா்ப்பாட்டம் நடத்தியதாக போலீஸாா் 60 பேரை கைது செய்தனா். பின்னா் திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டிருந்த 60 பேரும் மாலையில் விடுவிக்கப்பட்டனா்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...