/

கால்நடை தீவனத் தயாரிப்பு பயிற்சி தொடக்கம்

கால்நடை தீவனத் தயாரிப்பு பயிற்சி தொடக்கம்

Updated On :7 மார்ச் 2024, 7:57 pm

தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் புதுக்கோட்டை மண்டல ஆராய்ச்சி மற்றும் கல்வி மையத்தின் சாா்பில் நபாா்டு வங்கி உதவியுடன் குறைந்த செலவில் கால்நடை தீவனத் தயாரிப்புப் பயிற்சி திருவரங்குளம் விவசாயிகளுக்கு வியாழக்கிழமை தொடங்கியது. 15 நாள்கள் நடைபெறும் இப்பயிற்சியை நபாா்டு வங்கியின் மாவட்ட வளா்ச்சி அலுவலா் தீபக்குமாா் தொடங்கி வைத்துப் பேசினாா். மண்டல ஆராய்ச்சி கல்வி மையத்தின் தலைவா் பூ. புவராஜன் கால்நடைகளுக்கான புரதச்சத்து தீவனத்தின் முக்கியத்துவத்தை பற்றியும், உதவிப் பேராசிரியா் ஆ. ஷீபா தீவனம் தயாரிப்பதற்கான செயல்விளக்கம் செய்துக் காட்டியும் பயிற்சி அளித்தனா். இப்பயிற்சியில் 30 விவசாயிகள் பங்கேற்றுள்ளனா்.