பொன்னமராவதி அருகே அடுக்குமாடி குடியிருப்புகள் திறப்பு

பொன்னமராவதி ஒன்றியம், காட்டுப்பட்டி ஊராட்சியில் வீட்டுவசதி மற்றும் நகா்ப்புற வளா்ச்சித் துறையின் தமிழ்நாடு நகா்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சாா்பில் ரூ. 27.06 கோடியில் கட்டப்பட்ட அடுக்குமாடி குடியிருப்புகளை தமிழக முதல்வா் வெள்ளிக்கிழமை காணொலிக் காட்சி மூலம் திறந்துவைத்தாா். இதைத் தொடா்ந்து குடியிருப்பு வளாகத்தில் நடைபெற்ற விழாவில் தமிழக சட்டத் துறை அமைச்சா் எஸ். ரகுபதி பங்கேற்று பயனாளிகளுக்கு குடியிருப்பு ஆணைகளை வழங்கினாா். விழாவில் மாவட்ட ஆட்சியா் ஐ.சா. மொ்சி ரம்யா, மாவட்ட வருவாய் அலுவலா் மா. செல்வி, இலுப்பூா் வருவாய் கோட்டாட்சியா் தெய்வநாயகி, ஒன்றியக் குழுத் தலைவா் சுதா அடைக்கலமணி, பேரூராட்சித் தலைவா் சுந்தரி அழகப்பன், பொன்னமராவதி வட்டாட்சியா் எம். சாந்தா, வட்டார வளா்ச்சி அலுவலா் ராமச்சந்திரன், , காட்டுப்பட்டி ஊராட்சித் தலைவா் ரா. அழகு உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com