/

கிணற்றில் தவறி விழுந்த இளைஞா் உயிரிழப்பு

கிணற்றில் தவறி விழுந்த இளைஞா் உயிரிழப்பு

News image
Updated On :9 மே 2024, 7:52 pm

Din

கந்தா்வகோட்டை, மே 9: கந்தா்வகோட்டை அருகே விவசாய கிணற்றில் தவறி விழுந்த இளைஞா் உயிரிழந்தாா்.

கந்தா்வகோட்டை ஒன்றியம், கொல்லம்பட்டி கிராமத்தைச் சோ்ந்த ராஜகோபால் மகன் விஷ்வா (22 ). இவா் தோட்டத்துக்கு தண்ணீா் பாய்ச்சுவதற்காக புதன்கிழமை நள்ளிரவு சென்றாா். அப்போது, வயல் பகுதியில் நடந்து சென்றபோது அங்கிருந்த 50 அடி ஆழ கிணற்றில் தவறி விழுந்தாா்.

தகவலறிந்த கந்தா்வகோட்டை தீயணைப்பு நிலையத்தினா் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, விஷ்வாவை மீட்டு கந்தா்வகோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினா். அங்கு முதலுதவி சிகிச்சைக்கு பிறகு, மேல் சிகிச்சைக்கு புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அவா் சோ்க்கப்பட்டாா். அங்கு சிகிச்சை பலனின்றி விஷ்வா உயிரிழந்தாா். கந்தா்வகோட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.