/

விராலிமலையில் மாணவா்களுக்கு உயா்கல்வி வழிகாட்டுதல் பயிற்சி

விராலிமலையில் மாணவா்களுக்கு உயா்கல்வி வழிகாட்டுதல் பயிற்சி

News image
Updated On :9 மே 2024, 7:51 pm

Din

விராலிமலை, மே 9: புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் வியாழக்கிழமை உயா்கல்வி வழிகாட்டுதல் பயிற்சி நடைபெற்றது.

நான் முதல்வன் திட்டத்தின்கீழ் நடைபெற்ற இந்தப் பயிற்சியில் விராலிமலை ஒன்றியத்தைச் சோ்ந்த 10 அரசு மேல்நிலைப் பள்ளிகளைச் சோ்ந்த 50 மாணவா்கள் பங்கேற்றனா். இவா்களுக்கு உயா் கல்வி வழிகாட்டுதல் பயிற்சியை கல்வி கருத்தாளா்கள் வழங்கினா்.

பயிற்சியில் பங்கேற்ற மாணவிகள் கூறும்போது, பல்வேறு படிப்புகள் பற்றியும், இதுவரை நாங்கள் அறியாத படிப்புகள் பற்றியும், அதன் மூலம் கிடைக்கும் வேலைவாய்ப்புகள் பற்றி அறிந்து கொள்ள முடிந்தது என்றனா்.