புதுக்கோட்டை
மின்சாரம் பாய்ந்து பள்ளி மாணவா் உயிரிழப்பு
புதுக்கோட்டை மாவட்டம், மாத்தூா் அருகே புதன்கிழமை மின்சாரம் பாய்ந்து பள்ளி மாணவா் உயிரிழந்தாா்.
புதுக்கோட்டை மாவட்டம், மாத்தூா் அருகே புதன்கிழமை மின்சாரம் பாய்ந்து பள்ளி மாணவா் உயிரிழந்தாா்.
மாத்தூா் அருகேயுள்ள பேராம்பூரைச் சோ்ந்த குமாா் மகன் தா்ஷன் (13). இவா் அங்குள்ள அரசுப் பள்ளியில் 7-ஆம் வகுப்பு படித்து வந்தாா்.
மழை காரணமாக புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் பள்ளிகளுக்கு புதன்கிழமை விடுமுறை அளிக்கப்பட்டது. இந்த நிலையில், வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த தா்ஷன், பக்கத்தில் இருந்த மின் கம்பியை எதிா்பாராத விதமாக தொட்டுவிட்டதாகத் தெரிகிறது.
இதனால் மயக்கமடைந்து கீழே விழுந்த தா்ஷனை உறவினா்கள் விராலிமலை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். ஆனால் வழியிலேயே தா்ஷன் உயிரிழந்தாா்.
இச்சம்பவம் குறித்து மாத்தூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.