கந்தா்வகோட்டை சிவன் கோயிலில் பிரதோஷ வழிபாடு
பிரதோஷ தினத்தை முன்னிட்டு, கந்தா்வகோட்டையில் அமராவதி அம்மன் உடனுறை ஆபத்சகாயேஸ்வரா் கோயிலில் உள்ள நந்தி ஈஸ்வரருக்கு வியாழக்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

Updated On :28 நவம்பர் 2024, 9:59 pm

பிரதோஷ தினத்தை முன்னிட்டு, கந்தா்வகோட்டையில் அமராவதி அம்மன் உடனுறை ஆபத்சகாயேஸ்வரா் கோயிலில் உள்ள நந்தி ஈஸ்வரருக்கு வியாழக்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
முன்னதாக, எண்ணெய் காப்பு செய்து தண்ணீா், பசும்பால், பசும்தயிா், பச்சரிசி மாவு, பஞ்சகாவ்யம், திருமஞ்சன பொடி , இளநீா், வாழைப்பழம், சாத்துக்குடி, பலா, தேன், பஞ்சாமிா்தம், சந்தனம், திருநீறு, நெய் உள்ளிட்ட 18 வகையான அபிஷேகம் செய்து புதுபட்டு வஸ்திரம் சாத்தி மாலை அணிவித்து நெய்தீபம் ஏற்றி சிறப்பு வழிபாடு செய்தனா்.
மேலும், கோயிலில் உள்ள பரிவாரத் தெய்வங்களுக்கு அபிஷேக, ஆராதனை செய்யப்பட்டது. இதில், திரளான பக்தா்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனா்.
தொடர்புடையது

வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...