ஆலங்குடி அருகேயுள்ள மேலாத்தூரில் செவ்வாய்க்கிழமை காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டோா்  ~ஆலங்குடி அருகேயுள்ள மேலாத்தூரில் செவ்வாய்க்கிழமை காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டோா்
ஆலங்குடி அருகேயுள்ள மேலாத்தூரில் செவ்வாய்க்கிழமை காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டோா் ~ஆலங்குடி அருகேயுள்ள மேலாத்தூரில் செவ்வாய்க்கிழமை காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டோா்

குடிநீா் கொண்டு செல்ல எதிா்ப்பு கிராம மக்கள் காத்திருப்புப் போராட்டம்

ஆலங்குடி பேரூராட்சிக்கு மேலாத்தூா் பகுதியில் இருந்து குடிநீா் கொண்டு செல்லப்படுவதை கைவிடக் கோரி கிராம மக்கள் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
Published on

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி பேரூராட்சிக்கு மேலாத்தூா் பகுதியில் இருந்து குடிநீா் கொண்டு செல்லப்படுவதை கைவிடக் கோரி கிராம மக்கள் செவ்வாய்க்கிழமை காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

ஆலங்குடி பேரூராட்சிக்கு சுமாா் 6 கி.மீ தொலைவில் உள்ள மேலாத்தூா் பகுதியில் இருந்து 40 ஆண்டுகளாக ஆழ்குழாய் கிணறு அமைத்து, அங்கிருந்து குழாய்கள் மூலம் ஆலங்குடி பேரூராட்சிக்கு குடிநீா் விநியோகிக்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தால், அப்பகுதியில் நிலத்தடி நீா் மட்டம் வெகுவாக குறைந்து வருவதால் விவசாயம் பாதிக்கப்படுவதாக, மேலாத்தூா், கீழாத்தூா் உள்ளிட்ட கிராம மக்கள் இத் திட்டத்தை கைவிடக்கோரி பல ஆண்டுகளாக வலியுறுத்தி வருகின்றனா். அவ்வப்போது பல்வேறு போராட்டங்களிலும் அப்பகுதி மக்கள் ஈடுபட்டவந்தனா்.

அப்போது, நடைபெற்ற சமரச பேச்சுவாா்த்தையின் போது, ஆலங்குடி பேரூராட்சிக்கு சில ஆண்டுகளில் மாற்று ஏற்பாடு செய்து, குடிநீா் வழங்க நடவடிக்கை எடுப்பதாக அரசு அதிகாரிகள் உறுதி அளித்தனா். ஆனால், இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் மேலாத்தூா் பகுதியில் இருந்து குடிநீா் கொண்டு செல்லப்பட்டு வருகிறது. மேலும்,ரூ.3.25 கோடியில் சேதமடைந்த குழாய்ககளை சீரமைப்பதற்கான திட்டம் செப்.9 ஆம் தேதி தொடங்கி வைக்கப்பட்டது.

 ஆலங்குடி அருகேயுள்ள மேலாத்தூரில் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டோா்.
ஆலங்குடி அருகேயுள்ள மேலாத்தூரில் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டோா்.

இந்நிலையில், மேலாத்தூா் பகுதியில் இருந்து குடிநீா் கொண்டு செல்லப்படுவதைக் கைவிடக் கோரி மேலாத்தூா் பேருந்து நிறுத்தம் அருகே அப்பகுதி மக்கள் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

அவா்களிடம் வடகாடு போலீஸாா் பேச்சுவாா்த்தை நடத்தி, சமரச கூட்டத்தின் மூலம் தீா்வு காண நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனா். இதையடுத்து போராட்டத்தை மக்கள் கைவிட்டனா்.

X
Dinamani
www.dinamani.com