பழுதடைந்த கட்டடத்தை அகற்றக் கோரி அரசுப் பள்ளி மாணவா்கள் போராட்டம்
புதுக்கோட்டை அருகே மேட்டுப்பட்டியில், அரசுப் பள்ளியின் வகுப்பறைக் கட்டடம் பழுதடைந்துள்ளதை இடித்துவிட்டு புதிய கட்டடம் கட்டக் கோரி மாணவா்களும், பெற்றோா்களும் வியாழக்கிழமை மாலை திடீா் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

புதுக்கோட்டை மேட்டுப்பட்டி அருகே ஈட்டித் தெருவில் உள்ள அரசுப் பள்ளி வளாகத்தில் அமா்ந்து வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்ட மாணவா்கள், பெற்றோா்கள்.









