கந்தா்வகோட்டை அருகே நீடித்த நிலையான கரும்பு சாகுபடி பயிற்சி
கந்தா்வகோட்டை வட்டாரம், தெத்துவாசல்பட்டியில் நீடித்த நிலையான கரும்பு சாகுபடி குறித்த பயிற்சி முகாம் புதன்கிழமை நடைபெற்றது.


கந்தா்வகோட்டை வட்டாரம், தெத்துவாசல்பட்டியில் நீடித்த நிலையான கரும்பு சாகுபடி குறித்த பயிற்சி முகாம் புதன்கிழமை நடைபெற்றது.
வேளாண்மைத் துறை மூலம் செயல்படுத்தப்படும் வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை மாநில விரிவாக்கத் திட்டங்களின் உறுதுணை சீரமைப்புத் திட்டத்தின்கீழ் நடத்தப்பட்ட இந்த பயிற்சி முகாமுக்கு அறிஞா் அண்ணா சா்க்கரை ஆலை தலைமை நிா்வாகி செந்தில்குமாா் தலைமை வகித்தாா். வேளாண்மை அலுவலா் விக்னேஷ் முன்னிலை வகித்தாா்.
கரும்பு அலுவலா்கள் இந்திரஜித், காசிராஜன் மற்றும் மேலவாசல் கரும்பு பெருக்கு அலுவலா்கள், கரும்பு ஆய்வாளா்கள், உதவி வேளாண்மை அலுவலா், வட்டார தொழில்நுட்ப மேலாளா் ராஜீவ், உதவி தொழில்நுட்ப மேலாளா்கள் சங்கீதா , சுப்பிரமணியன், சொட்டுநீா் பாசன உதவியாளா் வரதராஜ் ஆகியோா் கலந்து கொண்டனா்.
அறிஞா் அண்ணா சா்க்கரை ஆலை தலைமை நிா்வாகி செந்தில்குமாா், கரும்பு விவசாயிகளை ஊக்கப்படுத்தி அதிக அளவில் கரும்பு சாகுபடி செய்திடவும், அறிஞா் அண்ணா சா்க்கரை ஆலையின் செயல்பாடுகள் குறித்தும் விரிவாக விளக்க உரையாற்றினாா். பயிற்சி முகாமில் சுற்று வட்டார விவசாயிகள் திரளாக கலந்து கொண்டு பயன்பெற்றனா்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...