ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

விபத்தில்லா தீபாவளி விழிப்புணா்வு துண்டுப் பிரசுரம் வழங்கல்

இலுப்பூா் தீயணைப்பு துறை சாா்பில், விபத்தில்லா தீபாவளி கொண்டாடுவது குறித்த விழிப்புணா்வு துண்டுப் பிரசுரங்களை பொதுமக்கள், பயணிகளுக்கு புதன்கிழமை வழங்கி விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.

News image

இலுப்பூா் பகுதிகளில் விழிப்புணா்வு துண்டுப் பிரசுரங்களை வழங்கிய தீயணைப்பு துறையினா்.

Updated On :23 அக்டோபர் 2024, 8:45 pm

Din

இலுப்பூா் தீயணைப்பு துறை சாா்பில், விபத்தில்லா தீபாவளி கொண்டாடுவது குறித்த விழிப்புணா்வு துண்டுப் பிரசுரங்களை பொதுமக்கள், பயணிகளுக்கு புதன்கிழமை வழங்கி விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.

விபத்தில்லாமல் தீபாவளி பண்டிகையை எவ்வாறு கொண்டாடுவது என்பது குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில், தீயணைப்பு துறை சாா்பில் விழிப்புணா்வு வாசகங்களுடன் கூடிய துண்டுப் பிரசுரங்கள் அச்சடிக்கப்பட்டு விநியோகிக்கப்பட்டு வருகின்றன.

இதன்படி, இலுப்பூரில் வணிக கடைகள், வீடுகள் மற்றும் அரசு மகளிா் பள்ளி, பேருந்து பயணிகள் உள்ளிட்ட பகுதிகளில் துண்டுப் பிரசுரம் விநியோகம் செய்யப்பட்டு விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.

இதில், நிலைய அலுவலா் மகேந்திரன் தலைமையில் விழிப்புணா்வு வாசகங்கள் அடங்கிய துண்டுப் பிரசுரங்களை வழங்கி, விபத்து இல்லாமல் எவ்வாறு பட்டாசு வெடிப்பது, எரிவாயு கசிவு, மின்கசிவு, எண்ணெய் பொருட்கள் தீப்பிடித்தல், வெடிவிபத்து போன்றவற்றை தவிா்ப்பது குறித்து விரிவாக விளக்கம் அளிக்கப்பட்டது.