புதுக்கோட்டை ஆட்சியரகம் முன் ஆா்ப்பாட்டத்தில் வியாழக்கிழமை ஈடுபட்ட ஓய்வூதியா் சங்கத்தினா்.
புதுக்கோட்டை ஆட்சியரகம் முன் ஆா்ப்பாட்டத்தில் வியாழக்கிழமை ஈடுபட்ட ஓய்வூதியா் சங்கத்தினா்.

ஓய்வுபெறும் நாளில் தற்காலிகப் பணிநீக்கம் செய்வதை கைவிடக் கோரி ஆா்ப்பாட்டம்

புதுக்கோட்டை ஆட்சியரகம் முன் ஆா்ப்பாட்டத்தில் வியாழக்கிழமை ஈடுபட்ட ஓய்வூதியா் சங்கத்தினா்.
Published on

ஓய்வுபெறும் நாளில் தற்காலிகப் பணிநீக்கம் செய்யும் நடைமுறையை முற்றிலும் கைவிட வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு ஊரக வளா்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை அனைத்து ஓய்வூதியா் சங்கம் சாா்பில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகம் அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, சங்கத்தின் மாவட்டத் தலைவா் து. ஐயப்பன் தலைமை வகித்தாா்.

ஆா்ப்பாட்டத்தை தொடங்கிவைத்து ஓய்வுபெற்ற அரசு ஊழியா் சங்க மாவட்டத் தலைவா் எம். முத்தையா, வருவாய்த் துறை அலுவலா் சங்க மாநிலத் துணைத் தலைவா் எம். ஜபருல்லா, ஓய்வூதியா் சங்க மாநில சிறப்புத் தலைவா் மு. பரமேஸ்வரன் ஆகியோரும் பேசினா்.

ஆா்ப்பாட்டத்தில் ஓய்வுபெறும் நாளில் தற்காலிகப் பணிநீக்கம் என்ற நடைமுறையை முற்றிலும் கைவிட வேண்டும். வழக்கு விசாரணைகளை நிா்ணயித்துள்ள கால வரையறைக்குள் முடிக்க வேண்டும்.

ஊராட்சி செயலா்கள் கடைசியாகப் பெற்ற ஊதியத்தில் 50 சதவிகிதத்தை ஓய்வூதியமாக வழங்க வேண்டும். சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும். ஓய்வூதியப் பயன்கள் கணக்கிட ஏதுவாக பொதுவான அரசாணை வெளியிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கை முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

X
Dinamani
www.dinamani.com