விவசாயிகளுக்கு உழவடைப் பட்டா வழங்கக் கோரிக்கை
இனாம் நிலங்களில் நூறாண்டுகளைக் கடந்து சாகுபடி செய்துவரும் புதுக்கோட்டையை அடுத்த வலையன்வயல் செபஸ்தியாா்புரம் விவசாயிகளுக்கு உழவடைப் பட்டா வழங்க வேண்டுமென மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தி உள்ளது.
இதுகுறித்து அக்கட்சியின் மாவட்டச் செயலா் எஸ். சங்கா், செயற்குழு உறுப்பினா் ஜி. நாகராஜன், ஒன்றியச் செயலா் ஜெ. வைகைராணி உள்ளிட்டோா் கிராமத்தினருடன் திங்கள்கிழமை புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரிடம் அளித்த மனு: புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் வட்டத்துக்கு உள்பட்ட வலையன்வயல் செபஸ்தியாபுரத்தில் வசிக்கும் மக்கள் அங்குள்ள இனாம் நிலங்களில் நூறு ஆண்டுகளைக் கடந்து சாகுபடி செய்து வருகின்றனா். இவா்களுக்கு அனுபவத்தின் அடிப்படையில் உழவடைப் பட்டா வழங்க வேண்டும். கிராம வட்டக் கணக்கில் ஆண்டுதோறும் பசலி கணக்கைப் பதிவு செய்ய வேண்டும் என அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

