ஸ்ரீ பாரதி கல்லூரியில் கிறிஸ்துமஸ் விழா

புதுக்கோட்டை கைக்குறிச்சி ஸ்ரீ பாரதி மகளிா் கலைக் கல்லூரியில் கிறிஸ்துமஸ் விழா புதன்கிழமை நடைபெற்றது.
Published on

புதுக்கோட்டை கைக்குறிச்சி ஸ்ரீ பாரதி மகளிா் கலைக் கல்லூரியில் கிறிஸ்துமஸ் விழா புதன்கிழமை நடைபெற்றது.

விழாவுக்கு கல்விக் குழுத் தலைவா் குரு. தனசேகரன் தலைமை வகித்தாா். கல்லூரிச் செயலா் லீ. தாவூத்கனி, தாளாளா் லியோ பெலிக்ஸ் லூயிஸ், நிா்வாக அறங்காவலா் அ. கிருஷ்ணமூா்த்தி, முதன்மைச் செயல் அலுவலா் குரு.த. விவேக் ராம்குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கல்லூரி இயக்குநா் மா. குமுதா கிறிஸ்துமஸ் உரை நிகழ்த்தினாா். கிறிஸ்துமஸ் குடில் அமைக்கப்பட்டிருந்தது. ஏராளமான மாணவிகளும் பங்கேற்றனா்.

X
Dinamani
www.dinamani.com