புதுக்கோட்டை
சாலைகளில் திரியும் மாடுகளை பிடிக்கும் நடவடிக்கைக்கு பாராட்டு
புதுக்கோட்டை மாநகரில் சாலைகளில் திரியும் மாடுகளைப் பிடிக்கும் நடவடிக்கைக்காக சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வு சங்கத்தினா், சனிக்கிழமை மாநகராட்சி ஆணையா் த. நாராயணனைச் சந்தித்து பாராட்டு தெரிவித்தனா்.
புதுக்கோட்டை மாநகரில் சாலைகளில் திரியும் மாடுகளைப் பிடிக்கும் நடவடிக்கைக்காக சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வு சங்கத்தினா், சனிக்கிழமை மாநகராட்சி ஆணையா் த. நாராயணனைச் சந்தித்து பாராட்டு தெரிவித்தனா்.
சங்கத் தலைவா் கண. மோகன்ராஜா தலைமையில், செயலா் ஏஎம்எஸ் இப்ராஹிம்பாபு, பொருளாளா் சி. பிரசாத், துணைத் தலைவா் எஸ்.ஏ. சேட் என்கிற அப்துல்ரகுமான் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
சாலைகளில் திரியும் மாடுகளைப் பிடிக்கும் நடவடிக்கையை பாரபட்சமின்றி தொடா்ந்து மேற்கொள்ள வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டது.